Thursday, March 7, 2019

கல்லறையில் நகைக்கும் கலைஞர், எம்.ஜி.ஆர்



மோடியின் பேச்சை கேட்டிருந்தால் கல்லறைக்குள் துயிலில் இருக்கும் கலைஞரும் எம்.ஜி.ஆரும் நிச்சயம் நகைத்திருப்பார்கள், 

அவசர நிலைக்காலத்தில் இந்திரா காந்தி எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கலைத்தது நியாயமா என்று நாற்பத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு  நேற்று மோடி நியாயம் கேட்டுள்ளார். ஆனால் பாவம் அவர் நியாயம் கேட்டது கலைஞருக்காக என்று அவருக்கும் தெரியவில்லை, அவரது பேச்சை தமிழாக்கம் செய்த "சிறு நீர் பாசன" புகழ் எச்.ராசாவுக்கும் கூட தெரியவில்லை.

ஆமாம்.

அவசர நிலைக்காலத்தில் கலைக்கப்பட்டது எம்.ஜி.ஆர் ஆட்சி அல்ல, கலைஞரின் திமுக ஆட்சி.

எம்.ஜி.ஆரின் ஆட்சியும் கலைக்கப்பட்டது. ஆனால் அது அவசர நிலைக்காலத்திற்குப் பிறகு வந்த ஜனதா அரசு கவிழ்ந்த பின்பு நடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக படு தோல்வி அடைந்த பின்பு கலைக்கபட்டது. அதுவும் நியாயமில்லை என்பதுதான் என் கருத்து.

ஆனால் ஒரு பிரதமருக்கு அரசியலும் தெரியவில்லை. வரலாறும் தெரியவில்லை.

மோடி ஆதரவாளர்கள் எப்படி உள்ளார்களோ அது போலத்தானே மோடியும் இருப்பார்!


1 comment:

  1. After renaming central station,he would have spoken this to create relevance with MGR.it is not about the history?!!

    ReplyDelete