தமிழ்நாடு போலீஸ் எதுக்கும் லாயக்கில்லையாம்.
யூனிபார்மை கழட்டிட்டு போயிருக்கனுமாம்.
ஹெச்.ராசா சொல்றது கரெக்டுதான்.
பெரியார் சிலையை இடிக்கச் சொன்னபோது வேடிக்கை பார்த்தீங்க இல்லையா!
ஹைகோர்ட் இரண்டு முறையும் சுப்ரீம் கோர்ட் ஒரு முறையும் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செஞ்சாலும் சிப் சேகரை கைது செய்ய துப்பில்லாமல்தானே திரிஞ்சீங்க!
"பாசிஸ பாஜக ஒழிக" என்று முழக்கமிட்ட சோபியாவை கைது செய்யத் தெரிஞ்ச உங்களால் சோபியாவை மிரட்டி கேவலமாக நடந்து கொண்ட காவிக்கயவர்கள் மீது உங்களால் ஃஎப்.ஐ.ஆர் கூட பதிய முடியவில்லை அல்லவா!
காவிக் களவாணிகளுக்கு பணிந்தே பணிந்தே வளைந்து போன முதுகெலும்பு கொண்ட உங்களை அந்த கேடு கெட்டவன் இதுவும் பேசுவான், இன்னமும் பேசுவான்.
இதைக் கேட்ட பின்பும் இன்னும் அதிகமான பணிவையும் பவ்யத்தையும்தானே காண்பித்தீர்கள்!
ஆமாம் உங்களுக்கு எதற்கு யூனிபார்ம்?
கழட்டிருங்கய்யா . . .
மாண்புமிகு கேசம்//சிகை//முடி மன்றங்களின் அரசர்களே, உங்களுக்கும் இது பொருந்துமோ?
அப்படி உங்களுக்கு யூனிபார்ம் வேண்டுமென்றால் முதல்வன் படத்தில் அர்ஜூன், ரௌடிகளை முட்டி போட வைத்து "பெண்கள் நம் கண்கள்" என்று சொல்ல வைப்பார்.
அது போல ஹெ.ராசாவை கீழே உள்ள படத்தில் உள்ள வாசகங்களை சொல்ல வையுங்கள்.
No comments:
Post a Comment