Thursday, September 13, 2018

அவங்களும் சொன்னாங்களா ஜெய்ட்லி . . .


நிதியமைச்சர் ஜெய்ட்லி கிட்ட சொல்லிட்டுத்தான் நான் லண்டன் புறப்பட்டேன் என்று மோசடி மன்னன் (ஜெமோ வார்த்தைகளில் "தோற்றுப் போன தொழில் முனைவர்")   விஜய் மல்லய்யா சொல்லி விட்டார். 

அவரை நான் என் அறையில் சந்திக்கவில்லை. நாடாளுமன்ற வராண்டாவில்தான் என்னை துரத்திக் கொண்டு வந்து சந்தித்தார் என்று ஜெய்ட்லி விளக்கம் கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. எங்கே சந்தித்தால் என்ன? சந்திப்பு நடந்தது உண்மைதானே! ("கோழி குருடா இருந்தா என்ன? குழம்பு ருசியா இருந்தா போதும்" என்ற கவுண்ட மணி வசனம்தான் நினைவுக்கு வருகிறது)

அது கிடக்கட்டும் ஜெய்ட்லி,

பதிமூன்றாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து இந்தியாவை விட்டு ஓடிப் போன நீரவ் மோடியும் அவரது மாமன் மெஹுல் சோக்சியும் உங்களிடம் சொல்லிக் கொண்டுதானே ஓடிப் போனார்களா என்பதை நீங்களே முதலில் சொல்லி விடுங்களேன்.

நீரவ் மோடி, நரேந்திர மோடியோடு க்ரூப் போட்டோவில் போஸ் கொடுத்தது போல உங்களோடும் ஏதாவது போட்டோ எடுத்து வைத்திருந்து அதை பின்னாளில் வெளியிட்டு அப்போது மழுப்புவதை விட நீங்களே சொல்லி விடலாமே!

என்ன கொடுமை பாத்தீங்களா ஜெய்ட்லி!

இந்த அவஸ்தை எல்லாம் நிதியமைச்சராக இருப்பதால்தான்.

யூனியன் கார்பைட் வாரண் ஆண்டர்ஸனை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டாம் 

என்றும்

நோக்கியா, இந்தியாவிற்கு வரி பாக்கி எதையும் தர வேண்டாம் 

என்றும்

ஒரு வக்கீலாக எவ்வளவு கம்பீரமாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார்கள்! இதெல்லாம் இந்தியாவிற்கு எதிரான செயல் கிடையாதா என்று யாராவது கேட்டார்களா?

அமைச்சர் என்பதால்தான் இப்படிப்பட்ட கேள்விகள்!

இதற்காகத்தானே ஜனநாயகத்தை அழித்து பாசிஸ ஆட்சியை அமலாக்க விரும்புகிறீர்கள்!


No comments:

Post a Comment