பிள்ளையாரின்
பெயரில் செங்கோட்டையில் காவிக்கயவர்கள் நடத்திய கலவரக் காட்சிகளின் காணொளியை பார்க்க
நேரிட்டது.
அதிலே
மிகவும் கவலையளித்த விஷயம் சிறுவர்கள் பலர் காவித் துணியை தலையில் கட்டியபடி கல் எறிவதும்
பூந்தொட்டிகளை வீசி உடைப்பதுமான காட்சிதான்.
இது
நாள் வரை வினாயகர் சிலை நிகழ்வுகளில் சிறுவர்கள் இருந்திருக்கிறார்கள். சாலையில் செல்பவர்களை
மடக்கி உண்டியல் குலுக்குவதும் ஒலி பெருக்கிகளில் இசைக்கும் குத்துப்பாடல்களுக்கு நடனம்
ஆடுவதுமாகத்தான் அவர்களின் அதிகபட்ச செயல்பாடாக இருந்திருக்கிறது.
ஆனால்
கல்லெறிவது போன்ற கலவர நடவடிக்கைகளில் அவர்களின் பங்கைப் பார்க்கும் போது மனதை என்னவோ
செய்கிறது.
எதிர்காலத்
தலைமுறையின் மனதிலும் நச்சினை கலக்கும் வேளையை
காவிக்கயவர்கள் துவக்கி விட்டார்கள் என்பது தெரிகிறது. முகத்தை துணியால் மூடிக் கொண்டு இன்றைக்கு கல்லெறியும் அக்குழந்தை
நாளை பட்டாக்கத்தியைத் தூக்கிக் கொண்டு வெட்டப் போகாதா?
அந்த
சின்னக்குழந்தைக்கு மதத்தைப் பற்றி என்ன தெரியும்? அரசியலைப் பற்றி என்ன தெரியும்?
கடவுளின்
பெயரால் காவிக்கயவர்கள் அதிகாரத்தை கைப்பற்ற நடத்தும் கலவரங்களில் சிறுவர்களின் எதிர்காலத்தை
நாசமாக்குவதா?
பொன்னாரோ
அல்லது தமிழிசையோ அல்லது ஹெச்.ராசாவோ தங்களின் குழந்தைகளுக்கு இந்த ரௌடிக் கலாச்சாரத்தை
கற்றுத் தருவார்களா?
கொடியவர்களே,
வேண்டாம். வெறி பிடித்த உங்கள் செயல்களை அடுத்த தலைமுறைக்கும் கற்றுத் தராதீர்கள்.
தகவல் 1
அலுவலகத்திலிருந்து புறப்பட்ட வேளையில் இன்னும் சில நிமிடங்கள் காத்திருங்கள் என்று செக்யூரிட்டி கூறினார். அலுவலக வாசலில் சாலையில் போக்குவரத்து அப்படியே நின்று போயிருந்தது.
ஒரே ஒரு பிள்ளையாரைக் கொண்டு போன ஒரு கும்பல் சாலையில் வாகனத்தை நிறுத்தி குத்து பாட்டிற்கு டான்ஸ் போட்டுள்ளார்கள். இரண்டு சிறுவர்கள் சைக்கிளில் கடந்துள்ளார்கள். அவர்களை மடக்கி அவர்கள் விளையாட எடுத்துச் சென்ற ஸ்டம்பை எடுத்து அதனாலேயே தலையில் அடித்துள்ளார்கள். ரத்தம் ஒழுக அருகிலிருந்த கடைக்குள் சென்ற சிறுவனை துரத்திக் கொண்டு போயுள்ளார்கள். தடுக்க முயன்ற ஒரு பெரியவரை கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி உள்ளார்கள். அந்த கும்பலில் இருந்த அனைவருக்கும் வயது 20 க்குள்தான் இருக்கும்.
காட்சி 2
நாங்கள் வீடு திரும்புகையில் மூன்று குட்டி யானை வண்டிகளில் பிள்ளையார்கள் செல்ல, வண்டியில் இருந்த அனைத்து இளைஞர்களும் முழுமையான போதையில் ஏதோ கத்திக் கொண்டே இருந்தார்கள்.
காட்சி 2
வண்டிகளைத் தொடர்ந்து சில இரு சக்கர வாகனங்கள். அதில் சென்ற பலரும் முழுமையான போதையில்தான்.
No comments:
Post a Comment