Friday, September 14, 2018

பாபா ராம்தேவ் – உடல் மட்டுமா பெருத்தது?




வாட்ஸப்பில் வந்த படம் இது.

பாஜக ஆட்சிக்காலத்தில் பாபா ராம்தேவின் உடல் மட்டும் பெருக்கவில்லை. மோடியின் அருட்பார்வையில் எல்லாமே பெருத்துள்ளது என்பதற்கான குறியீடாக வேண்டுமானால் அந்த படத்தை  எடுத்துக் கொள்ளலாம்.

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு

பாபா ராம்தேவின் வருமானம் என்பது 2010- 11 ல் 317 கோடி ரூபாயாக, 2013- 2014 ல் 1184 கோடி ரூபாயாக இருந்தது 2016- 2017 ல் 11,526 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் அது 25,000 கோடி ரூபாயாக உயரலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அது மட்டுமா

மோடி ஆட்சிக்கு வந்த பின்புதான் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை  பாபா ராம்தேவிற்கு

பாஜக ஆளும் மாநிலங்களான

ஹிமாசலப் பிரதேசம்,
உத்தர்கண்ட்,
உத்தரப் பிரதேசம்,
ஹரியானா,
மத்தியப் பிரதேசம்

ஆகியவை இலவசமாக தாரை வார்த்துள்ளது.

சர்ச்சைகளும் கூடத்தான்

பாபா ராம்தேவின் ஆயுர்வேத லேகியங்களில் மிருகக் கழிவுகள் கலக்கப்பட்டுள்ளது என்பதை முன்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் ஆதாரபூர்வமாக நிரூபித்தார்.

இக்காலக்கட்டத்தில்

பதஞ்சலியின் நெல்லிக்காய் ஜூஸ் நுகர்விற்கு அருகதையற்றது என்று ராணுவ காண்டீன் விற்பனைக்கு தடை செய்யப்பட்டது.

உற்பத்தி நாளுக்கு ஒரு மாதம் பிந்தைய தேதி போடப்பட்டு பலப் பொருட்கள் விற்பனைக்கு வந்தது அம்பலமானது. 

பதஞ்சலி பொருட்களில் கலப்படம் அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்களும் வந்து கொண்டே இருக்கிறது. 

கேரள வெள்ள நிவாரணத்திற்கு அளித்த பொருட்களில் பெரும்பாலானவை காலாவதியானது.

"அச்சா தின்' என்பது மக்களுக்குதான் வரவில்லையே தவிர அம்பானி, அதானி மட்டுமல்லாது பாபா ராம்தேவிற்கும்தான் வந்திருக்கிறது.

அதன் அடையாளமாகத்தான்

அவரது உடலும் பெருத்துள்ளது. 






No comments:

Post a Comment