Tuesday, September 18, 2018

வெள்ளையன் முதல் கொள்ளையன் வரை . . .



"வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தில்
வாழ்க்கையை துவக்கியவர்.

இளமைக்காலத்திலேயே சிறைத்தண்டனையை
ஒன்றரை ஆண்டுகள் அனுபவித்தவர்.

தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணியில்
சேர்ந்து எல்.ஐ.சி யிலும் தட்டச்சராய் தொடர்ந்தவர்.

சங்கம் அமைத்து வளர்த்தெடுத்ததால்
கொல்கத்தாவிலிருந்து  நாக்பூருக்கும் கோவைக்கும்
தூக்கி அடிக்கப்பட்டவர்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்
இணைச்செயலாளராய் இருந்த அவருக்கு
மக்களவை உறுப்பினர் எனும் பொறுப்பை
மார்க்சிஸ்ட் கட்சி அளித்தது. 

அங்கே காட்டிய திறத்தாலே 
"பொதுக் கணக்குக் குழு தலைவர்" எனும்
பொறுப்பும் தேடி வந்தது.

ஆலமரமாம் எல்.ஐ.சி யை ஐந்தாய் வெட்டிப் போட
இந்திரா அம்மையார் கொண்டு வந்த மசோதாவை
அபிமன்யுவின் தீரத்தோடு மக்களவையில் எதிர்த்து நின்றார்.
இவர் உடைத்த பத்ம வியூகத்தை பின் எவராலும் சேர்க்க
முடியவில்லை. இன்றும் எல்.ஐ.சி கொடி ஒளி வீசி பறக்கிறது.

உலகமயமாக்கல் என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகள்
என்ற வடிவில் வந்த கொள்ளையர்களை எதிர்த்து
"வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தில் தொடங்கிய
அவரது பொது வாழ்வு இறுதி நாள் வரை 
போராட்டத்தில்தான் தொடர்ந்தது,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராய், "பீப்பிள்ஸ் டெமாக்ரஸி" இதழின் ஆசிரியராய்.


இன்று ஆட்சியாளர்களே கொள்ளையர்களாய், கொலைகாரர்களாய்  மாறிய சூழலில் அவர்களை வீழ்த்திட
அவரின் எழுத்துக்கள் எப்போதும் நம்மை வழிநடத்தும்.

செவ்வணக்கம் தோழர் சுனில் மைத்ரா !!!



2 comments:

  1. Proud to have such great leaders to guide us in AIIEA.Trying sincerely to follow them much closer.Long live Com.Sunil and Red salute to you.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete