அமைதிக்கான
நோபல் பரிசை மோடிக்கு தர வேண்டும் என்று தமிழிசை அம்மையார் திருவாய் மலர்ந்துள்ளார்.
மாநிலத் தலைவர்
பதவியை கைப்பற்ற எஸ்.வி.சேகர் விரும்புவதால் அதனை தடுக்க, தன் பதவியை தக்க வைக்க ஏதாவது
டுபாக்கூர் வேலை செய்ய வேண்டிய அவசியம் அந்த அம்மையாருக்க்கு உள்ளது.
அதற்காகத்தான்
இந்த அறிக்கை என்றாலும் மோடிக்கு அமைதிக்கான பரிசு தர வேண்டும் என்ற கோரிக்கையில் நியாயம்
இருக்கத்தான் செய்கிறது.
ஆமாம்.
குஜராத்தில்
மூவாயிரம் இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்ட போது அதனை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்த
நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்த நல்லவர்.
ஐம்பது நாளில்
முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்று வீரமாக பேசினாலும்
அப்படி எல்லாம் கொளுத்திக் கொள்ளாமல் அமைதியாய் இருந்தவர்.
மாட்டின்
பெயரால் கொலைகள் கூடாது என்று அவர் எப்போதெல்லாம் சொல்கிறாரோ, அப்போதெல்லாம் இதுதான்
அவர் பேச்சுக்கு மரியாதை என்று உடனடியாக சங்கிகள் இரண்டு பேரை வெட்டிப் போடுவார்கள்.
எனக்கு இவ்வளவுதான் மரியாதையா என்று கோபப்படாமல் அமைதியாய் இருப்பவர்கள்.
விஜய் மல்லய்யா
தொடங்கி இன்று ஓடிப் போன இன்னொரு குஜராத்தி வரை மோசடிப் பேர்வழிகள் இந்தியாவை ஏமாற்றிப்
போனாலும் அதற்காக வேகப் பட்டு நடவடிக்கை எடுக்காமல் அமைதியாய் இருப்பவர்.
மனித உரிமைப்
போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டால் ஒரு அஞ்சலி கூட சொல்லாமல் அமைதியாய் இருப்பவர்.
தேர்தலின்
போது கொடுக்கப்பட்ட எந்த உறுதிமொழியையும் காப்பாற்றவில்லை என்பதற்காக நாட்டு மக்களால்
கழுவி கழுவி ஊற்றப் பட்டாலும் கொஞ்சம் கூட வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை இல்லாத
ஜென்மமாக அமைதி காப்பவர்.
ஊர் ஊராய்
பறந்து பறந்து வாய்ச்சவடால் விட்டாலும் நாடாளுமன்றத்தை ஒரு தியான மண்டபம் என கருதி
அங்கே மட்டும் எப்போதும் அமைதியை கடை பிடிப்பவர்.
இதோ இப்போது
ரபேல் ஊழல் அம்பலமான நிலையில் ஜெய்ட்லி, நிர்மலா போன்ற எடுபிடிகளை பேச வைத்து விட்டு
தான் மட்டும் வாயில் கொழுக்கட்டை வைத்திருப்பதால் அமைதியாய் இருப்பவர்.
இப்போது சொல்லுங்கள்.
மோடிக்கு
தராமல் வேறு யாருக்கு தருவதை அமைதிக்கான பரிசை?
மோடிக்கு நோபல் கொடுத்தே ஆகணும்
ஆமாம், கொடுத்தே ஆகணும்
appo modi nadippukku oscar illaiyaa? avarukku oscar'um kudukkanum ..
ReplyDeleteமோடிக்கு NO 'BELL' விருது கொடுக்க வேண்டும்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
DeleteSUPER
ReplyDelete