Wednesday, September 5, 2018

டெல்லியில் நிகழ்ந்த அதிசயம் . . .

புது டெல்லியில் எத்தனையோ பேரணிகள் நடந்துள்ளது.

விவசாயிகள் அங்கே கூடியுள்ளார்கள்.

தொழிலாளர்கள் அங்கே கூடியுள்ளார்கள்.

விவசாயத் தொழிலாளர்கள் அங்கே கூடியுள்ளார்கள்.

ஆனால் முதல் முறையாக

விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கூடியுள்ளார்கள்.

விவசாயிகளின் கோரிக்கைகள்,
தொழிலாளர்களின் கோரிக்கைகள்,
விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் 

அடிப்படையில் இந்திய மக்களின் கோரிக்கைகளை முன் வைத்து

சி.ஐ.டி.யு, (CITU)
அகில இந்திய விவசாயிகள் சங்கம், (AIKS) 
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் (AIAWA) 

ஆகிய மூன்று அமைப்புக்களின் தலைமையில் முயற்சியில் லட்சக்கணக்கான தோழர்கள் புது டெல்லியில் திரண்டுள்ளனர்.

கடல் இல்லாத புது டெல்லியில் உருவான செங்கடல் இது.

இந்த செங்கடல் உருவாக்கும் சுனாமி, பாசிஸ பாஜக ஆட்சியை நிச்சயம் வீழ்த்தும்.

கீழே உள்ள புகைப்படங்கள் அந்த உண்மையை உணர்த்தும்.

மது பானமும் பிரியாணியும் கைச்செலவுக்கு பணமும் கொடுத்தும் கூட ஆட்கள் வராத அழகிரியின் பேரணிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை முதலாளித்துவ ஊடகங்கள் அளிக்காதது அவர்களின் அதர்மம் என்பதையும் மனதில் கொள்வோம். 














இந்த போராட்டத்தில் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் தோழர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது பெருமைக்குரியது. அதே நேரம் இப்பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பி திட்டமிட்டாலும் இயலாமல் போய் விட்டது வருத்தமாகவும் உள்ளது. 







No comments:

Post a Comment