நேற்று பண்ருட்டியில் எங்கள் சங்க மாநாட்டை நடத்துவதற்கான வரவேற்புக்குழு அமைப்பதற்கான கூட்டம். இரவு வீடு திரும்ப தாமதம் ஆனதால் காலையிலும் அவகாசம் இல்லாமல் ரஜனிகாந்த்திற்கு தூத்துக்குடியில் கிடைத்த வரவேற்பையும் அதற்கு அவர் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் காண்பித்த எதிர்வினை ஆகியவற்றின் காணொளியை இப்போதுதான் பார்க்க முடிந்தது.
எழுதிக் கொடுத்த கதை, திரைக்கதை, வசன ஸ்கிரிப்டில் மாணவன் சந்தோஷ் கேட்ட கேள்வி இல்லாததால் அவரால் அங்கே எதுவும் பேச முடியவில்லை.
ஆனால் அந்த சம்பவம் உருவாக்கிய மன அழுத்தம் அந்த முதியவரை மிகவும் பாதித்து விட்டது. அதன் விளைவாகத்தான் பத்திரிக்கையாளர்களிடம் அவ்வளவு ஆணவமாக நடந்து கொண்டிருக்கிறார்.
சமூக விரோதிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் காவல்துறையை தாக்கியதால்தான் பிரச்சினை
என்றும்
யூனிபார்ம் போட்டவர்கள் யாரை தாக்கினாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்
என்றும்
போராட்டங்களால்தான் தமிழ்நாடு சுடுகாடாகிறது
என்றும்
காவிக்கூட்ட டயலாக்கை அப்படியே வாந்தியெடுத்துள்ளார்.
கல்லூரி படித்த காலத்தில் மதுரையில் ரஜனி ரசிகர்களைத் தவிர மற்றவர்கள் அவரை "மெண்டல்" என்றுதான் அழைப்பார்கள். அது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்படி சொல்பவர்களோடு கடுமையான விவாதம் எல்லாம் செய்துள்ளேன்.
ஆனால் நேற்றைய பேச்சைக் கேட்கையில் அது உண்மைதான் என்றும் வயதாலும் அவருக்கு ஏற்கனவே உள்ள கடன் பிரச்சினை, வாடகை பாக்கி பிரச்சினை இவற்றோடு நேற்றைய "அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்" மொமெண்டும் சேர்ந்து கொள்ள மனதின் குறைபாடு வெளியே வந்து விட்டது.
"ஏய், வேற கேள்வி இருக்கா ?" என்பதுதான் அதிலே உச்சகட்டம்.
அந்த பேட்டியில் சொல்லப்பட்ட ஒவ்வொரு கருத்தும் அபத்தம். ஒவ்வொன்றுக்கும் அவரை கேள்வி கேட்க முடியும் என்றாலும் அனுதாபத்தின் காரணமாக எதுவும் கேட்கப் போவதில்லை.
யூனிபார்மில் உள்ள போலீஸின் கைகளை ரஜனி வெட்டுவது போல காட்சியமைத்த மணிரத்னத்தின் இன்னொரு படமான அஞ்சலியில் இதே போன்ற பிரச்சினை உள்ள ஜனகராஜை எங்கே அனுப்புவார்கள் என்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
மேலே உள்ள படம் உங்கள் நினைவுகளைத் தூண்டுவதற்காக
அதுதான் ரஜனிகாந்திற்கான இடம்.
நிச்சயமாக சட்டசபை இல்லை.
ஐயா, தமிழ்நாட்டை பற்றி தெரிந்து கொள்வதற்காக உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். சில பதிவுகளில் என் கருத்தை சொல்ல நினைத்தாலும் நேரமின்மையால் விடுபட்டு போய் விட்டது. சமூக அக்கறை பலருக்கு இருந்தாலும், ஒரு சிலரால் மட்டுமே களத்தில் இறங்கி என்ன தடை வந்தாலும் சோர்ந்து போகாமல் அடுத்தவருக்காக போராட முடியும். இன்று நாம் அனுபவிக்கும் குறைந்த பட்ச சலுகைகள் கூட உங்களை போல ஒருவர் என்றோ போராடி பெற்றுத் தந்தது தான். உங்கள் உழைப்பு வெற்றி பெற்று அடக்குமுறைக்கு உள்ளான எளியோர் பயன் பெறட்டும். தொடர்ந்து எழுதுங்கள் உண்மைகளை தெரிந்து கொள்ள எமக்கு உதவியாக இருக்கும்.
ReplyDeleteஎனது வருத்தமெல்லாம் உங்களை போன்றோர் எதற்காக ரஜனிக்கெல்லாம் இத்தனை பதிவு போட்டு இலவச விளம்பரம் செய்கிறீர்கள் என்பது தான். யாரும் கண்டு கொள்ளாமல் விட்டாலே அந்தாள் காணாமல் போய் விடுவார். நீங்களெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு அந்த மனிதன் அருகதை இல்லாதவன்.
//எனது வருத்தமெல்லாம் உங்களை போன்றோர் எதற்காக ரஜனிக்கெல்லாம் இத்தனை பதிவு போட்டு இலவச விளம்பரம் செய்கிறீர்கள் என்பது தான். யாரும் கண்டு கொள்ளாமல் விட்டாலே அந்தாள் காணாமல் போய் விடுவார்.//
Deleteநீங்க அப்படி நம்புகிறீர்கள். ஆனால் தமிழகத்தின் உண்மை நிலை திரைபடங்களில் நடிப்பவர்கள் தான் தங்களை ஆள வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களே அதிகமாக இருக்கிறார்கள். எம்ஜிஆர்ரை புரச்சி தலைவராகவும், ஜெயலலிதாவை புரச்சி தலைவியாகவும், அது போதாது என்று அம்மா என்றும் வேறு கற்பனை செய்து மகிழ்ந்தவர்கள் தமிழர்கள்.
Seems every guy running for office wants to act like trump, insulting the media, supporting murderous cops over innocent victims. Probably mental guy will become cm.
ReplyDeleteரஜினியை நல்லிடத்தில் வைத்துள்ளது, ராமன் அங்கிள், சீமான், வேல்முருகன் வைக்கோ போன்றவர்கள்>
ReplyDeleteநெகடிவ் பப்ளீஸிட்டிக்கு சொந்தக்காரர் இப்போ ரஜினி ஆகிவிட்டார். உலக்மே ரஜினி ரஜினி என்கிறது இன்றூ.
ரஜினி இதேபோல் தொடர்ந்து எதிர் கருத்து தெரிவிக்கனூம். பதிவுலகில் ஒரு வருண்< வெளீ உலகில் ஒரு ரஜினினு ஆயிடும், அங்கில்> :)))
சரி, சரி மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். ரஜனிகாந்த்தை ஆளுக்காள் தாக்கினால் உங்களால் வேறு என்ன செய்ய முடியும்?
Deletehttp://timeforsomelove.blogspot.com/2018/05/blog-post_31.html
ReplyDeleteஒரு ரஜீனி ரசிகன் தன் தாயோட தாலிய அடகுவச்சு காலா படத்துக்கு செலவு பண்ணுனா அந்த நஷ்டம் அவனுக்கு மட்டும்தான். தன் குழந்தையோட அருனாக்கயிற வித்து 2.0 படத்துக்கு செலவு பண்ணுனா அந்த நஷ்டம் அவன் குடும்பத்துக்கு மட்டும்தான். ஆனா வரும் தேர்தல்ல ரஜீனிக்கு ஓட்டு போட்டு வாக்குகள பிரிச்சு ரெட்டை-பொட்டைகள (Courtesy: மைலாப்பூர் மாபியா) மெஜாரிட்டி வரவச்சுட்டானுகனா அது தமிழ்னாட்டுக்கே நஷ்டம். ஆதனால நாம educate செய்யவேண்டியது ரஜினிய இல்ல! ரஜினி ரசிகர்கள!!
ReplyDelete