Friday, May 4, 2018

ஸேடிஸ்டு மோடிக்கு மனித நேய எதிர்வினை . . .



"நீட்" தேர்வு வேண்டாமென்றா சொல்கிறாய்?

"நீட்" தேர்வில் அநாகரீக சோதனை போட்டு அராஜகம் நிகழ்வதாகவா விமர்சனம் செய்கிறாய்"

எங்கள் கையில் அதிகாரம் உள்ளது. நாங்கள் நினைத்தால் உங்களை இன்னும் அலைக்கழிப்போம். மற்ற மாநிலத்தவர்கள் எப்படி தேர்வு எழுதலாம் என்று சிந்திக்கையில் தேர்வு மையத்திற்கு எப்படி செல்வது என்று உங்களை அச்சப்பட வைப்போம்.

இதுதான் மோடி அரசின் குரூர புத்தி. ஸேடிஸம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை மோடி அரசு படைத்துள்ளது. மோடி அரசு எதைச் செய்தாலும் கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கவே நாங்கள் ஆட்சியில் உள்ளோம் என்பது எடுபிடி வகையறாக்களின் வாடிக்கை.

மற்ற மாநிலங்களை எல்லாம் விட அதிகமான கல்வி நிலையங்கள் உள்ள மாநிலம் தமிழகம். இங்கே போதுமான தேர்வு மையங்கள் கிடைக்கவில்லை என்ற சி.பி.எஸ்.இ யின் வாதம், ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய்.

தமிழக மாணவர்களை மருத்துவக் கல்வி படிக்க விடாமல் அந்த இடங்களை வெளி மாநிலத்தவர்களுக்கு தாரை வார்க்கும் மிகப் பெரிய சதியன்றி வேறென்றுமில்லை. 

"நீட்" எதிர்ப்பு இயக்கம் தீவிரமாக வேண்டிய அவசியத்தை மோடி அரசின் ஆணவமும் எடுபிடியின் கள்ள மௌனமும் உருவாக்கியுள்ளது.

இச்சூழலில் பிற மாநிலங்களில் தேர்வு எழுதச் செல்பவர்களுக்கு உதவி செய்ய பலர் முன் வந்துள்ளது. இந்திய மாணவர் சங்கம், கேரளாவில் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்ய பல உதவி மையங்களை அமைத்துள்ளது.

இயற்கைச் சீற்றங்களின் போது இயல்பாக ஊற்றெடுக்கும் மனித நேய உணர்வு இப்போதும் எழுந்துள்ளது.

மோடி அரசின் அடக்குமுறைகளுக்கு தமிழர்கள் அடி பணிய மாட்டார்கள் என்பது இந்த மனித நேய நடவடிக்கைகள் மூலம் நிரூபணமாகி உள்ளது.

இப்போதும் தோல்வி மோடிக்கே


1 comment:

  1. Dear Raman Sir,

    Is this the challenge faced by other states students too? Meaning, this is happened only to Tamil Nadu students or other state students also forced by the CBSE Directorate to write their exams outside their states. No news about this in any medias. If that is not the case, it is a clear vengeance by the Modi' government on our students.

    Raman A V (Kurukku Muttan)

    ReplyDelete