உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நாளை நான்கு மணிக்கு கர்னாடக சட்டப்பேரவையில் யெடீயூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றாக வேண்டும்.
நாளை நான்கு மணிக்கு என்னவெல்லாம் நடக்க வாய்ப்பு உண்டு?
பல்லாயிரம் கோடி முதலீட்டில் நடந்து கொண்டிருக்கிற குதிரை பேரம் ஒரு வேளை வெற்றி பெற்றிருந்தால் எந்த சிக்கலும் இல்லாமல் யெடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறலாம்.
ஒரு வேளை பதினைந்து நாள் அவகாசம் குறைக்கப்பட்டதால் குதிரை பேர முயற்சிகள் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் அப்போது என்னவெல்லாம் நடக்கலாம்?
குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில் யெட்டி வெற்றி பெற்றதாகக் கூட தற்காலிக சபாநாயகர் அறிவிக்கலாம். அதற்குத் தகுந்தாற்போலத்தான் ஒரு மோசடிப் பேர்வழியை தற்காலிக சபாநாயகர் அறிவித்துள்ளார் என்பது கவனத்திற்குரியது.
காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களை சட்டப் பேரவையிலிருந்து அடித்து துரத்த ரௌடிகளை சட்டமன்றத்துக்கு உள்ளே பாஜக அனுப்பலாம்.
சட்டப்பேரவைக்கு உள்ளேயே ஏதாவது பிரச்சினையை உருவாக்கி காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றி விட்டு உள்ளே உள்ள பாஜக உறுப்பினர்களை மட்டும் வாக்களிக்க வைத்து யெட்டி ஜெயித்ததாக அறிவிக்கலாம்.
நீதிபதி குமாரசாமி பாணியில் தற்காலிக சபாநாயகர் தப்புக் கணக்கு கூட அறிவிக்கலாம்.
ஒரு வேளை இந்திய அரசியல் வானில் மிகப் பெரிய அதிசயம் நிகழ்ந்து நேர்மையோடு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் யெட்டி தோற்றுப் போய் ராஜினாமா செய்யலாம்.
காத்திருப்போம்.
நாளை நல்லதே நடக்கும் என்று.
ஜனநாயக ஒளி பரவட்டும்.
ReplyDeleteமோடியின் ஆட்சி வீழட்டும்
மோடியும் அமித் ஷாவும் பக்கா கிரிமினல்கள்.
ReplyDeleteஎன்ன வேண்டுமானாலும் செய்வார்கள் திருட்டுப் பசங்கள்
ஆமாம். என் அச்சமே அதனால்தான்
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete