Thursday, May 31, 2018

மாறாத நேர்மையாளர் ரஜனி . . .

கடந்த வருடம் எழுதிய இரண்டு பதிவுகளை மீண்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 

நேற்றைய சம்பவம் குறித்து மாலையில் விரிவாக எழுத வேண்டும். 

போராட்டங்களுக்கு எதிரான ஆளும் வர்க்க சிந்தனையில் இருந்து மாறாத நேர்மையாளராக ரஜனிகாந்த் தன்னை நிரூபித்துக் கொண்டுள்ளார்.

இப்போது சகவாச தோஷமும் முதலமைச்சராகி விட்ட நினைப்பும் சேர்ந்து கொண்டு அந்த வயோதிகரின் நோயை முற்ற வைத்திருக்கிறது. 


உங்களுக்கு பிடிக்கிறதா என்பது முக்கியமே இல்லை ரஜனி . . .


உங்கள் நிறம் என்ன என்பதை இத்தனை நாள் புரியாமல் இருந்தவர்களுக்கும்  நீங்கள் யார் என்பதை காண்பித்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி மிஸ்டர் ரஜனிகாந்த்.

தமிழில் உங்களுக்கு பிடிக்காத வார்த்தைகளில் ஒன்றாக "வேலை நிறுத்தம்" என்பதை சொல்லியுள்ளீர்கள். உங்கள் படத்தைப் பார்த்து உங்களை உழைப்பாளியாக, ஆட்டோ தொழிலாளியாக நினைத்துக் கொண்டு இருக்கும் அப்பாவி ரசிகர்களுக்கு நீங்கள் ஒரு முதலாளி, முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதி என்பதை  அம்பலப்படுத்திக் கொண்டதற்கு நன்றி.  

வேலை நிறுத்தம் என்பது எங்களுக்கும் அவ்வளவு பிடித்தமானது அல்ல. ஒரு வேலை நிறுத்தம் நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது எங்களுக்கே நன்றாகத் தெரியும். உங்கள் படங்களில் காண்பிப்பது போல நொடிப் பொழுதில் துவக்கப்படுவதல்ல வேலை நிறுத்தம். எவ்வளவு தயாரிப்பு தேவைப்படும் தெரியுமா? ஒரு தொழிலாளியை மனரீதியாக தயார் செய்யாமல் வேலை நிறுத்தம் செய்திட முடியாது.

வேலை நிறுத்தம் என்பது தொழிலாளிகளின் கடைசி ஆயுதம். அவனது நியாயம் தொடர்ந்து மறுக்கப்படும் போது, பேச்சுவார்த்தை உள்ளிட்ட அனைத்து வாய்ப்புக்களும் மறுக்கப்படும் போதுதான் அந்த இறுதி ஆயுதத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. 

துரோகிகள், கருங்காலிகள், உடனிருந்து குழி பறிக்கும் நயவஞ்சகர்கள் என பல சவால்களை எதிர் நோக்க வேண்டியிருக்கும் என்பது தெரியுமா உங்களுக்கு? ஊதிய வெட்டு தொடங்கி பணி இழப்பு வரை அனைத்து அபாயங்களுக்கும் தயாராகித்தான் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. 

ஒரு வேலை நிறுத்தம் தோற்றுப்போனால் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தொழிலாளர்களை அணி சேர்ப்பதன் சிரமம் புரியுமா உங்களுக்கு?

யாருக்கும் யாருக்கும் என்றோ, எதற்காக என்றோ சொல்லாமல் உங்கள் ரசிகர்களை ஏமாற்ற  போர், போர் என்று சில நாட்கள் முன்பாக முழங்கினீர்கள் அல்லவா?  

தொழிலாளி நடத்தும்  வர்க்கப் போர்தான் வேலை நிறுத்தம். 

அந்த போரிலே நீங்கள் யார் பக்கம் இருப்பீர்கள் என்பது நன்றாக தெரிந்து விட்டது. உங்கள் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்த தமிழர்களில் 90 % க்கும் மேற்பட்டவர்கள் உழைப்பாளி மக்கள்தான். நீங்கள் அவர்கள் பக்கம் நிற்க மாட்டீர்கள் என்று எங்களுக்கு முன்பே தெரிந்த உண்மையை இப்போது நீங்களே சொல்லி விட்டீர்கள்.

உங்களுக்கு பிடிக்கிறதா, பிடிக்கவில்லையா என்பது எங்களுக்கு முக்கியமுமில்லை, அவசியமில்லை.

எங்களுக்கு அவசியம் என்றால் நிச்சயம் நாங்கள் நடத்துவோம் "வேலை நிறுத்தம்" 

ஏனென்றால் அதுதான் எங்கள் வாழ்க்கையை பாதுகாக்கும். சோறு போடும். மனிதனாய் கௌரவமாய் நடைபோட வைக்கும்.

உங்கள் திரைப்படங்கள் அல்ல. 


இது கூட ஸ்ட்ரைக் போலத்தான் ரஜனி




ஆஸ்ரம் பள்ளி கட்டிடத்திற்கு வாடகை கொடுக்காத பிரச்சினை தொடர்பாக அப்பள்ளியின் சார்பாக அளிக்கப்பட்டுள்ள அறிக்கை.

தங்கள் பிரச்சினைகளுக்காக, தாங்கள் சுரண்டப்படுகையில் தொழிலாளர்கள் "வேலை நிறுத்தம்" செய்வதை தமிழில் பிடிக்காத வார்த்தை என்று சொன்னது நினைவில் உள்ளதல்லவா? 

இதோ, அதே சுரண்டல் என்ற வார்த்தையைப் போட்டு வாடகை கொடுக்காத போராட்டத்தை ரஜனியின் குடும்பத்தினரே நடத்தியுள்ளார்கள்.

இடத்தின் உரிமையாளருக்கு எதிராக அவர்கள் நடத்தியுள்ள இந்த வேலை நிறுத்தம் இப்போது உங்களுக்கு பிடித்தமான வார்த்தையா திரு ரஜனிகாந்த் அவர்களே!

4 comments:

  1. இந்த ரசிகன் என்ற மாமடையர்களுக்கு இதெல்லாம் புரிகிறதா என்ன ?

    ReplyDelete
  2. அதெல்லாம் சரி அங்கிள். ரீலை விடுங்க. இங்கே உள்ள ரியல் வீடியோவைப் பாருங்க.

    Check this out!

    https://youtu.be/UrXphxwtUZ0

    ரஜினி சொன்னதுல என்ன தப்பு? சும்மா பொய்ப் பிரச்சாரம் செய்வது யாரு?1!

    இதையும் உங்க தளத்தில் வெளீயிடலாமே?

    ReplyDelete
    Replies
    1. ஓ இந்த அறைகுறையைப் பாத்துட்டுத்தான் உங்க ஆளு ஏமாந்துட்டாரா?
      ஆட்சியர் அலுவலகத்தில் தீ வைத்தது காவல்துறை என்ற உண்மையை மறைக்கிற கேடு கெட்டவர்களுக்கு துணை போகிற எல்லோருமே மக்கள் விரோதிகள். துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்துபவர்கள் அயோக்கியர்கள்

      Delete
  3. Those who oppose eliminating terrorists are by themselves terrorists.

    ReplyDelete