மோடியை பிடிக்காதவங்க எல்லாம் பயங்கரமான போங்கு ஆட்டம் ஆடிக்கிட்டு இருக்காங்க . . .
இந்த விராத் கோலியை விளையாட்டுத்துறை அமைச்சர் ஏதோ உடற்பயிற்சி தொடர்பான சவாலுக்கு இழுத்தாராம். அதை செஞ்சு முடிச்ச கோலி அதே சவாலுக்கு மோடியை இழுத்தாராம். மோடியும் செஞ்சிடறேன்பா ன்னு சொன்னாராம்.
நாட்டில ஆயிரம் பிரச்சினை இருக்கறப்போ, இதென்னய்யா வெட்டி சவாலுன்னு யாரும் அந்த மந்திரியைக் கேக்கலை!
அவரென்ன பிரதமரா இல்லை வெட்டியா ஊர் சுத்திக்கிட்டு இருக்கற தற்குறியா, அவரை எதுக்கய்யா சவாலுக்கு இழுக்கறேன்னு யாரும் கோலியைக் கேக்கலை!
சவால்ன்னு வந்தப்பறம் பயந்து போகாம தில்லா நின்ன மனுசன் மோடி, அவரைப் போய் கலாய்க்கறீங்களேய்யா?
தூத்துக்குடி பத்திக்கிட்டு எரியுது. வாய்ல என்ன கொழுக்கட்டை வச்சிருக்கய்யான்னு கேட்கறீங்களேய்யா!
ஆளுக்காளு, அவரை சவாலுக்கு இழுக்கறீங்களேய்யா!
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கத் தயாரான்னு ராகுல் காந்தி கேட்கறாரு.
தான் வாங்கின எல்லா டிகிரியை எல்லாம் போட்டு உங்களால் நீங்க படிச்சு வாங்கின பட்டத்தை எல்லாம் பதிவு செய்ய முடியுமான்னு கேட்டு ஒத்தரு மானத்தை வாங்கறாரு.
ஏம்பா யாரு அது?
யெச்சூரியோட ஒரு பத்து மினிட்டாவது விவாதம் நடத்த முடியுமான்னு நீ கூட கேட்டியேன்னு ஞாபகப் படுத்தறது?
ஒரு விஷயம் அல்லாரும் புரிஞ்சுக்குங்க . . .
மோடிக்கு
பொருளாதாரம் புரியாது.
நிர்வாகம் தெரியாது.
வரலாறு கிடையாது.
சும்மா பேட்டையில உதார் உட்டுத்திரியற தாதாக்கும்
மோடிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.
அவரால இந்த மாதிரி வெட்டி சவால்தான் முடியும்.
என்னை மாதிரி யாரால நடிக்க முடியும்னு அவர் ஒரு சவால் உட்டா யாரால அவர கெலிக்க முடியும்?????????
அவரை மாதிரி யாரால் விதவிதமாக ட்ரெஸ் போட முடியும்?
ReplyDelete