Tuesday, May 15, 2018

நாட்டுக்கு நல்லதென்றால் குமாரசாமி வந்தாலும் தப்பில்லை . . .




காலை எட்டு முப்பது மணி நிலவரம் ஒன்று.
பத்து மணிக்கு கொஞ்சமாக மாறியது.
பனிரெண்டு மணி நிலவரம் வேறு.
இரண்டு மணிக்கு எல்லாம் முடிந்து போனதோ என்று தோன்றியது.
மூன்று மணிக்கு நிலைமை மாறியது.
நான்கு மணிக்கு மனதுக்கு ஒரு நிறைவு கிடைத்தது.

குமாரசாமியை அப்படி ஒன்றும் நல்லவர், வல்லவர் என்றெல்லாம் சொல்லி விட முடியாது.

ஆனாலும்

யெடியூரப்பா போன்ற ஊழல் பேர்வழிகள் முதல்வராவதற்குப் பதிலாக

கேடு கெட்ட, கேவலமான பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்குப் பதிலாக, அதன் மூலம் காவிக் கூட்டம் ஆணவத்தில் ஆடுவதைத் தவிர்க்க, குமாரசாமியே முதல்வராவது ஒன்றும் தவறில்லை என்றே உணர்கிறேன்.

மதச்சார்பற்ற வாக்குகள் பிரிவதன் மூலம் பாரதீய ஜனதா கட்சியே ஆதாயம் அடையும்

என்பதை

வாக்குகளின் சதவிகிதத்திற்கும் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் பலத்த வேறுபாடு உள்ளது. எனவே  விகிதாச்சார பிரதிநிதித்துவம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தம் தேவை

என்பதை

பொய்களையும் அவதூறுகளையும் அடிப்படையாகக் கொண்ட மோடியின் தாக்குதல் பிரச்சாரத்தை  எதிர்கொள்வதற்கான பொருத்தமான வியூகம் அமைக்க வேண்டிய அவசரம் உள்ளது

என்பதை

கர்னாடக மாநில தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது.

மதச்சார்பற்ற, ஜனநாயக, முற்போக்கு இடதுசாரிகள் ஒன்றுபட்டு களம் கண்டால் மோடியையும் காவிக்கூட்டத்தையும் வீழ்த்துவது ஒன்றும் சிரமமில்லை.

மோடி பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் ஆபத்தை முறியடிக்க எதுவும் செய்யலாம். நாட்டிற்கு அதுதான் நல்லது என்பதால் எதையும் செய்யலாம், குமாரசாமி முதல்வராவது உட்பட.

இப்போது காண்பித்துள்ள முதிர்ச்சியை காங்கிரஸ் கட்சி தொடர வேண்டும்.



5 comments:

  1. Really a magnanimous act by Congress party and a real check to bjp.hope the same thought will last for all the five years.

    ReplyDelete
  2. நாட்டுக்கு நல்லது செய்வோர் தான் தேவை!

    ReplyDelete
  3. party leader with less than 40 MLAs to become CM. shame to idiots who even support and sustain jihadis in their venomous hatred again BJP. perverted democracy adored by foreign salves aka commies. secular b*s*rds will stoop to any level and worse, justify that. India without such reprehensible rogues would raise soon.

    ReplyDelete
    Replies
    1. If you belong to a decent family, You will not use such a vulgar word. It will not take much time for me to call you back as Bastard.

      Better Mind your word, Mr Sanghi

      Delete
    2. அயோக்கியக் காவிக்கூட்டம் கோவாவில், மணிப்பூரில், அருணாச்சலப் பிரதேசத்தில், மேகாலயாவில், உத்தர்கண்டில் என்ன செய்தது என்பது தெரியுமா உத்தம புத்திரனே?

      Delete