Monday, May 28, 2018

ரத்தத்தில் தோய்ந்த வெற்றி . . .



ஸ்டெரிலைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர்  அறிவித்து சீல் வைத்து மூடுகிறார்கள்.

தூத்துக்குடி மக்களின் உறுதியான போராட்டம்,

அப்போராட்டத்திற்கு தமிழக மக்களின் ஆதரவு,

முதலாளிகள் வீசிய எலும்புத் துண்டுகளுக்கு விசுவாசமாய் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய எடுபிடி அரசு, பின்னணியில் இருந்த மோடி அரசு ஆகியவற்றின் மீது உலகெங்கும் எழுந்த வலுவான கண்டனங்கள், தமிழகம் முழுதுமான கடுமையான எதிர்வினை.

ஆகியவையே இம்முடிவை நோக்கி ஆட்சியாளர்களைத் தள்ளியுள்ளது.

இது நிரந்தரமா? நீதிமன்றம் முடிவை மாற்றுமா? 

போன்ற கேள்விகள் இருக்கத்தான் செய்கிறது. 

ஆனாலும் இது குறிப்பிடத்தக்க வெற்றி,
நம்பிக்கை அளிக்கும் வெற்றி.
மக்கள் சக்தி மகத்தானது என்பதை நிரூபிக்கும் வெற்றி.
தியாகத்தின் விளைபயன் இந்த வெற்றி
அஞ்சாத வீரத்தின் அடையாளம் இந்த வெற்றி
உயிர் நீத்த தோழர்களின் குருதியில் நனைந்த வெற்றி.
கார்ப்பரேட்டுகளோ, மோடிகளோ முறியடிக்கப்பட
முடியாதவர்கள் கிடையாது  என்று உணர்த்தியுள்ள வெற்றி.

இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு செவ்வணக்கம்.

9 comments:

  1. ஆக, தூத்துக்குடில மூடியாச்சு. அடுத்து சிவகாசி, திருப்பூர்ல எல்லாம் ஏகப் பட்ட பொல்லுஷன் இருக்காம். எவனாவது திருப்பூர்ல, சிவகாசில பொல்லுஷன் இல்லைனு சொல்லு பார்ப்போம்?! அங்கே உள்ள எல்லா ஆலைகளயும் அடச்சுட்டு, எல்லாருமே மும்பை, கல்கத்தால போயி பிச்சைக்காரன் போல் அங்கே உள்ள ஆலையில் வேலை பார்த்து சாவுங்க. இல்லைனா சவுதில போயி அடிமையா இருப்போம்.

    அடுத்து மும்பை தாராவிக்கு போயி பிச்சை எடுப்போம்! அங்கேலாம் பொல்லுஷனே கெடையாது.

    இனிமேல் மும்பையில், கல்கதாவிலெல்லாம் வீதிதோரும் எங்கே பார்த்தாலும் தமிழ் ஒலிக்கும்..

    ஐயா பிச்சை போடுங்க!!!

    தமிழனா? மதராசி??? இங்கே ஏன்டா வந்து சாவுறீங்க? ஹிந்தில கேக்குறான்

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் அனானி,

      நீங்க என்ன கமலஹாசன் ரசிகரா?

      வருண் எழுதின பதிவை அப்படியே காப்பி & பேஸ்ட் செஞ்ச நீங்க,
      அந்த கமலஹாசனை திட்டினதை மட்டும் விட்டுட்டீங்களே?

      செய்யற திருட்டுத்தனத்தை முழுசா செய்யுங்க

      Delete
  2. மிஸ்டர் அனானி,

    ஸ்டெரிலைட் மூடுவதற்காக இவ்வளவு கொதிக்கிற நீர்,
    நோக்கியாவை இழுத்து மூடி ஐயாயிரம் தொழிலாளர்களை
    நடுத்தெருவில் நிறுத்திய போது எப்படி பொங்கினீர்கள்
    என்று சொல்ல முடியுமா?

    வேதாந்தாகாரன் உமக்கும் எலும்புத்துண்டு வீசியிருக்கானா?

    ReplyDelete
    Replies
    1. நம்மளோட பதில் வருணோடாது என்று சொல்லி இருக்கீங்க சார்
      ஆமா வருண் பதிவில் இருந்துதான் எடுத்தேன்
      அவரோட பதிவு என் சிந்தனையை தூண்டியபடியால் அதை எடுத்தேன்
      நோக்கியா பற்றி வருண் கிட்ட கேட்டு பாருங்க

      Delete
    2. பதில் சொல்ல துப்பில்லாதவனுங்களுக்கு காப்பி அடிக்க மட்டும் தெரியுதாக்கும்?

      Delete
  3. அதெல்லாம் இருக்கட்டும் சாரு
    கூடங்குளம் அணு உலைக்கு எதுக்கு கம்யூனிச பெயர் தாங்கி அமைப்புகள் ஆதரவு தெரிவிச்சாங்க
    அணு உலை மாசு வராதா ?

    ReplyDelete
  4. இந்த கமெண்ட் நிச்சயம் வெளியிடமாட்டீர்கள்
    நீங்கள் எந்த பிரிவு என்று தெரியாது.
    ஆனால் நீங்கள் பல தடவை புகழ் பாடிய தீக்கதிர் கூடங்குள போரை கிண்டல் செய்திருக்கின்றது

    https://www.facebook.com/notes/marx-anthonisamy/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/384165161656214/

    ReplyDelete
  5. கேள்வி கேட்கிற வீரனெல்லாம் அடையாளத்தோட வந்தால் பதில் கிடைக்கும்

    ReplyDelete
  6. காலை எழுந்தவுடன் 'தினமலத்தை' நக்குபவர்கள் இந்தமாதிரி கம்பெனிகளுக்கு ஆதரவாதான் பேசுவார்கள். அவர்களது அக்ரகாரம் சேரியாக மாற்றப்படாதவரை அடித்தளமக்களின் வலி தெரியாது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதுபோல தாமிரபரணி நதிக்கரையோர அக்ரகாரங்கள் சேரியாக மாறிக்கொண்டிருக்கிறது

    ReplyDelete