அநேகமாக அந்த வீடியோவை நீங்களும் பார்த்திருக்கலாம். வயது முதிர்ந்த ஒரு தம்பதி நாற்காலியில் அமர்ந்திருக்க பூஜை ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. ஒரு நல்ல பாம்பு படமெடுத்து ஆடிக்கொண்டிருக்க, அதனை ஒரு பாம்பாட்டி கட்டுப் படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த பாம்பிற்கு பூஜை நடக்கிறது. பூ போடுகிறார்கள், தீபாராதனை காட்டுகிறார்கள். வீடியோவின் இறுதியில் ஏதாவது ட்விஸ்ட் இருக்கிறதா என்று பார்த்தால் எதுவுமில்லை.
பாம்பை வைத்தெல்லாம் பூஜை செய்வது ரொம்பவே ஓவர் என்று தோன்றியது. கொஞ்சம் அசந்தாலும் சிக்கல், மனிதனுக்கோ அல்லது பாம்புக்கோ . . .
இன்றைய செய்தியில்தான் தெரிந்தது.
அந்த பாம்பு பூஜையின் வீடியோ வைரலாக பரவியதில் வனத் துறையின் கவனத்திற்கும் சென்று, பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாக அறிவிக்கப்பட்ட அந்த வகை பாம்பினத்தை வைத்து
அந்த சர்ப்ப பூஜையை நடத்திய அந்த முதியவர்களின் மகன் சுந்தரேசன் கைது செய்து செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள பாம்பாட்டி பழனியை தேடிக் கொண்டிருக்கிறார்கள் (இவர் ஒன்றும் எஸ்.வி.சேகர் இல்லையே. அதனால் விரைவில் பிடித்து விடுவார்கள்)
தேவையற்ற வேலை செய்ததன் விளைவு இப்படி கம்பி எண்ணும் நிலையை உருவாக்கி விட்டது.
ஆனால் ஒன்று
இந்த கைது நடக்காவிட்டால்
சர்ப்ப பூஜைகள் அதிகரித்து விடும்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅந்த பாம்பு உன்னை கொத்தியிருக்க வேண்டும்.
ReplyDeleteநீயெல்லாம் உயிர் வாழ்ந்து என்ன பிரயோசனம்?