Monday, May 14, 2018

காவிரியே வரல! கோதாவரியாம் . . .



"காவிரியையும் கோதாவரியையும் இணைக்கும் திட்டம் பற்றி மத்திய மந்திரி நிதின் கட்காரி என்னிடம் பேசினார். அந்த திட்டம் வந்து விட்டால் மேட்டூர் அணையில் கிடைக்கும் உபரி நீரை சேலம். நாமக்கல், திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு கொடுப்பேன். இத்திட்டத்தால் காவிரியில் நமக்கு 125 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும்"

இது தமிழக முதல்வர் என்று சொல்லப்படுகிற எடுபிடி நேற்று ஒரு கூட்டத்தில் பேசியது.

அவரிடம் சொல்ல வேண்டிய சில உண்மைகள் உள்ளது. 

காவிரியில் கொடுக்க வேண்டிய தண்ணீரே கொடுக்காமல் மத்தியரசும் கர்னாட அரசும் ஏமாற்றுகிறது. உரிமையுள்ள காவிரிக்கே இந்நிலை என்றால் கோதாவரி தண்ணீர் எப்படி ஐயா கிடைக்கும்? கொடுப்பார்களா?

உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படியே, அது அநீதி என்பது ஒரு புறம் இருக்க காவிரியில் வர வேண்டிய தண்ணீரின் அளவு 177.75 டி.எம்.சி. கோதாவரி இணைத்த பிறகு 125 டி.எம்.சி தண்ணீர் வரும் என்றால் அதற்கு என்னய்யா அர்த்தம்? 

177.75 டி.எம்.சி தண்ணீர் ஒழுங்கா வந்தாலே மேட்டூர் அணை நிரம்புமா? உபரி இருக்குமா என்பது சந்தேகம். இதிலே இவர் புதிதாக நாமக்கல், சேலம், திருச்சி விவசாயிகளுக்கு உபரி நீரை தருவாராம்.

"யோவ் கூமுட்டை"

என்று அழைக்க விரும்பினாலும்

நாகரீகம் கருதி

"மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அவர்களே,

கோதாவரி காவிரி இணைப்பு என்று உங்களிடம் மத்தியரசு போடுகிற அதே சீனை நீங்கள் மக்களிடம் போடாதீர்கள்.

நமக்கு உரிமையான காவிரி நீரை பெற்றுக் கொடுங்கள். அதற்காக மத்தியரசிடம் போராடுங்கள் என்று சொல்ல மாட்டேன். அதற்கான தைரியம் கிடையாது என்பது நன்றாக தெரியும். மோடியின் காலில் விழுந்தாவது பெற்றுக் கொண்டு வாருங்கள்.

காலில் விழுவது ஒன்றும் உங்களுக்கு புதிதல்லவே.

ஜெயலலிதா, சசிகலா, ஜெ ஜீப் சக்கரம், ஹெலிகாப்டர் விசிறி ஆகியவற்றின் கீழே விழுந்தவர்தானே!"

என்று முடித்துக் கொள்கிறேன்.


3 comments:

  1. அடிமைகள் அடுத்து நைல் நதி அல்லது அமேசான் நதி கொண்டு வருவோம் என்றும் சொல்வார்கள்.

    ReplyDelete
  2. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்

    ReplyDelete
  3. நாகரீகம் கருதி_ பரவாயில்லை

    ReplyDelete