இப்போதெல்லாம் ஃப்ரூட் சாலட் என்றால் பழங்களை வெட்டி, அப்படியே அதன் மீது கொஞ்சம் ஐஸ் கிரீமை போட்டு கொடுத்து விடுகிறார்கள்.
அந்த காலத்தில் செய்யப்படும் தயாரிப்பை முயன்றேன். அம்முறை உங்களுக்கும்.
பழங்களை வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
நல்ல தக்காளிப்பழங்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். அதன் தோலை எடுத்து விட்டு மிக்ஸியில் நன்றாக அறைத்துக் கொள்ளவும்.
அந்த தக்காளிச் சாறை அடுப்பில் வைத்து சர்க்கரை சேர்த்து கிளறவும். நன்றாக ஜாம் பதத்திற்கு வருகையில் ஏலக்காய் பொடி கலந்து இறக்கி வைக்கவும்.
சூடு ஆறிய பின்பு பழங்களோடு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு சாப்பிடவும்.
ஐஸ்கிரீமே தேவையில்லை. இது மட்டுமே போதும்.
உண்மையில் ஐஸ் கிரீம் வில்லன் அல்ல
ReplyDeleteஅதில் உள்ள சுகர் தான் வில்லன்
சுகர் இல்லாத ஐஸ் கிரீம் நல்லதுதான்
இந்த செய்முறையிலும் சுகர் உள்ளது
எல்லோருக்கும் பொருந்தாதே
Super... சங்க ராமன் மட்டுமல்ல... சமையல் ராமனும் .. 😀😀😀
ReplyDeleteப்ரூட் சாலட் தகவல்களுக்கு நன்றி.
ReplyDelete