பீரங்கி வாயில் பிணைத்து
சிதறடித்து சாகடித்தான்,
கோட்டை நகரம் வேலூரில்,
சுதந்திரக் கனல் ஓயவில்லை.
“சுட்டேன், சுட்டேன்,
குண்டுகள் தீரும்
வரை சுட்டேன்”
கொக்கரித்தான் ஒரு
மூடன்
பொற்கோயில் நகரத்தில்.
இந்திய விடுதலை நிற்கவில்லை.
லிட்டில் பாய் என்றும்
ஃபேட் மேன் என்றும்
பெயர் வைத்து
அணுகுண்டு வீசினான்,
ஜப்பான் தலை நிமிராமல்
இல்லை.
தொட்டாலே பற்றிக்
கொள்ளும்
ரசாயனத்தை தூவினான்.
ஆடைகளை களைந்து
அலறி ஓட வைத்தான்,
வியட்னாமில் பொதுவுடமை
பூக்கத்தான் செய்தது.
குடிசை வீட்டில் அடைத்து
வைத்து
நாற்பத்தி நான்கு
உயிர் குடித்தான்
வெண்மணி மண்ணில்.
செங்கொடி இன்னும்
பறக்கத்தான் செய்கிறது.
சிந்திய ரத்தத்துளிகள்
ஆவேச நதியின் ஊற்றுக்கண்கள்.
ஒரு தியாகியின் உதிரம்
ஒராயிரம் போராளிகளை
உருவாக்கும் . .
.
அடக்குமுறையும் ஆணவமும்
மானுடப் பிரவாகத்தில்
மூழ்கித்தான் போகும்.
அநீதிக்கு என்றும்
வாழ்வில்லை.
அதர்மம் நிரந்தரமாய்
வென்றதில்லை.
துப்பாக்கிகள் உயிரைக்
குடிக்கும்.
உண்மையைக் கொல்ல முடியாது.
உண்மை ஒரு நாள்
பிரளயமாய் திரண்டெழுந்து
அனைத்திற்கும் கணக்கு
தீர்க்கும்
தூத்துக்குடி கணக்கும்
கூட . . .
அருமை தோழா
ReplyDeleteUngal unmaiyana unarvugal engum paravattum.inkulab jindabad.
ReplyDeleteஅதர்மம் நிரந்தரமாய் வென்றதில்லை.துப்பாக்கிகள் உயிரைக் குடிக்கும்.உண்மையைக் கொல்ல முடியாது.*** correct, dangerously armed naxal thugs, rogue commies and violent jihad groups cannot kill truth, intimidate innocents and spread canards. Every one will be hunted and sent to hell. Be ready for that journey.
ReplyDeleteதம்பி, காவிப் பொறுக்கி, நெனைப்புதான் பொழப்பை கெடுக்குமாம்.
Deleteகாட்டிக் கொடுத்த காவிக் கூட்டத்துக்கு வரலாறும் கிடையாது. உண்மையும் கிடையாது. உங்க அழிவு விரைவில் நடக்கும்
அருமையான வரிகள்
ReplyDeleteமாற்றம் வரவேணும்