Thursday, May 24, 2018

இணைய தளத் தடை இன்னொரு கேவலம் . . .



தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இணைய தளம் முடக்கப்பட்டு விட்டது. சமூக வலைத்தளங்கள் மூலமாக அங்கே நடக்கும் அராஜகங்களை வெளி உலகம் அறிந்து கொள்ளக் கூடாது என்ற சதியே இது. 

இணைய தளத்தை முடக்கி மிகப் பெரிய அராஜகத்தை கட்டவிழ்த்து விடப்போகிறதா வேதாந்தா-மோடி-எடுபிடி கூட்டணி?

எதைச் செய்யவும் துணிந்து விட்டார்கள் என்பதைத்தான் நேற்று மறுபடியும் நடந்த துப்பாக்கிச் சூடு உணர்த்துகிறது. 

அறிவிக்கப்பட்ட அவசர நிலைக்காலத்தின் போது கருத்துரிமை பறிக்கப்பட்டது. இப்போது அவசர நிலை என்று அறிவிக்காமலேயே கருத்துரிமை பறிக்கப்படுகிறது.

தமிழக வரலாற்றில் இது இன்னும் ஒரு கேவலமான நிகழ்வு,

ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உண்டு.

நீங்கள் அடக்க அடக்கத்தான் போராட்டங்கள் முன்னிலும் வேகமாக பீறிட்டு எழும்பும். 

இதுதான் இயற்கையின் விதி.

சர்வாதிகாரம் எப்போதும் நிலைத்ததில்லை. 

பி.கு

இந்த இணையதளத் தடை தனி நபர்களின் இணைப்புக்களுக்கா இல்லை நிறுவனங்களின் இணைப்பிற்கும் சேர்த்தா என்று தெரியவில்லை. அப்படி நிறுவனங்களின் இணைப்புக்களும் தடை செய்யப்படும் என்றால் வங்கி, காப்பீடு, ரயில்வே போன்ற பல துறைகளின் சேவை கடுமையாக பாதிக்கப்படும்


1 comment: