Friday, May 24, 2019

சிதம்பர வெற்றி சிறப்பானது.



சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தோழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அவரது வெற்றியின் வாக்கு வித்தியாசம் குறைவுதான். நிலைமை மாறிக் கொண்டே இருந்தது. பாஜகவின் பிரதான கூட்டாளியான தேர்தல் ஆணையம் அந்த வெற்றியை தடுக்க முடியுமா என்று முயன்றது. தாமதிக்கத்தான் முடிந்தது.

எப்படியாவது தோழர் திருமாவளவனை தோற்கடிக்க வேண்டும் என்று கடுமையாக முயன்றார்கள். பணம் பாதாளம் தாண்டியும் பாய்ந்தது. அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர்கள் மிரட்டப் பட்டார்கள். ஜாதி வெறி நச்சாக பரப்பப் பட்டது.  இதற்கெல்லாம் சான்று தேர்தல் நாளன்று பொன்பரப்பியில் நடைபெற்ற வன்முறைக் கலவரம். 

அன்புமணி தோல்வி எவ்வளவு முக்கியமோ, அதை விட தோழர் திருமாவளவின் வெற்றி முக்கியம்.

இறுதியில் அது சாத்தியமாகி விட்டது.

வாழ்த்துக்கள் தோழர் திருமா.
உங்கள் குரல் டெல்லியில் வலிமையாய் ஒலிக்கட்டும்

11 comments:

  1. பணம்,ஜாதி இரண்டுமே திமுக,அதிமுக,பாமக,விக.... என அனைத்து கட்சிகளாலும் முன்னெடுக்கப்பட்டதே. இது சாதரண மனிதனர்க்கு முன் கேவலமான தோல்வியே.....

    மக்கள் நீதி மய்யம்,நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகளே உண்மையான,மனம் திருப்தி கொள்ள கூடிய வகையில் அமைந்தது.

    நாம் முன்னெடுத்து சொல்ல வேண்டியது நாம் தமிழர்,மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளையே தவிர இது போன்ற ஜாதிய மோதல்களை உருவாக்கி குளிர் காய்பவர்களையோ,பணத்தை வாக்குகளை அறுவடை செய்யும் அரசியல் வாதிகளையோ அல்ல...

    ReplyDelete
    Replies
    1. நாம் தமிழர் கட்சி - தமிழ் பாஜக
      மக்கள் நீதி மய்யம் - குழப்ப கேஸ்
      காமெடி செய்யாதீங்க சார்

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. பேசாமல் கம்யூனிஸ்ட் கட்சியை கலைத்து விடலாம்

    ReplyDelete
    Replies
    1. அதை அனாமதேய கோழை எல்லாம் சொல்லக் கூடாது

      Delete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. I am very happy for him and the fellow in Madurai.
    Hope they do something better for the constituency.

    what advice you would give them?

    ReplyDelete
    Replies
    1. இருவரும் மக்களுக்கான இயக்கங்களில் புடம் போட்ட தங்கமாய் பிரகாசிப்பவர்கள். நான் அறிவுரை வழங்கும் இடத்தில் அவ்ர்கள் இல்லை

      Delete
  7. Stalin vazhka !!!!!

    ReplyDelete
  8. Did not sleep until the results were declared for this constituency....very tensed! So happy about Annan winning it!!!!

    ReplyDelete