கீழேயுள்ள
செய்தியை நீண்ட நாட்கள் முன்பாகவே இயக்குனர் திரு ஏ.சி.திருலோக்கசந்தர் அவர்களின் கட்டுரைத்
தொடரில் படித்தது நினைவில் உள்ளது.
1975-ல் வெளியான நடிகர் திலகத்தின் 175வது படமான " அவன் தான் மனிதன்" திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.
இப்பாடல் குறித்த சுவாரஸ்ய நிகழ்வொன்று உண்டு. இப்படத்தில் அனைத்து பாடல்களும் தயாராகி விட்ட நிலையில் முழுக்க சிங்கப்பூரில் படமாக்க வேண்டிய இப்பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதி தரவில்லை. மே மாதம் படப்பிடிப்பிற்கு தயாரான நிலையில் மெல்லிசை மன்னர் MSV கவிஞரை பார்க்கும் போதெல்லாம் அண்ணே மே மாதம் ! மே ! மே ! என்று நச்சரித்து வந்தார்.
கவிஞர் கடுப்பாகி என்னடா விச்சு எப்ப பார்த்தாலும் மே! மே! னு ஆடு மாதிரி கத்திக்கிட்டு இருக்க. நீ மே தான கேட்ட இந்தா போட்டுக்கோ பல மே என்று பாடலின் ஒவ்வொரு வரியும் மே என்று முடியும் மாதிரி எழுதினார் கவிஞர்.
இது மே மாதம் இல்லையா அதற்கான பாடல் இந்த பாடலில் அனைத்து வரிகளும் மே மே என்று முடியும்!
பாடலின்
காணொளி இணைப்பு இங்கே உள்ளது
இப்போது
இன்னொரு தகவல் உலா வருகிறது.
கர்ணன்
திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே சிறப்பானது. அதிலே மிகவும் இனிமையானது “இரவும் நிலவும்
மலரட்டுமே!”
அந்த
பாடல் உருவானது பற்றி இப்போது உலவும் தகவல் கீழே
அந்த
பாடல் கம்போஸிங்கிற்காக மெல்லிசை மன்னர் கவியரசரை அழைத்துள்ளார். இன்று மே தினம். எனக்கு
விடுமுறை நாள் வர முடியாது என்று மறுத்துள்ளார். எம்.எஸ்.வி விடவில்லை. கவிஞரின் வீட்டிற்கே
சென்று அடம் பிடித்து அவரை அழைத்துச் சென்றுள்ளார். மே தின விடுமுறையை கெடுத்து விட்டாயே
என்று சொல்லி விட்டு ஒவ்வொரு வரியும் “மே” யில் முடிவது போல எழுதிக் கொடுத்து விட்டார்.
இத்தகவல்
உண்மையா என்று சொல்ல இருவரும் இல்லை. கர்ணன் திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே பெங்களூரில்
ஒரு விடுதியில் தங்கி ஒரு வார காலத்தில் எழுதப்பட்டது என்றும் படித்துள்ளேன். அத்தகவல்
உண்மையாயிருக்கும் பட்சத்தில் மேதினத்தன்று எழுதப்பட்டது என்பது தவறு.
எது
எப்படி இருந்தால் என்ன?
அந்த
இனிமையான பாடலை இன்னொரு முறை கேளுங்களேன்.
காணொளி
இணைப்பு இங்கே உள்ளது
அருமையான பதிவு, மே பாடலை கேட்டேன் நண்பரே, பாடல் அருமையோ அருமை...!
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteதண்ணி குடி.
Deleteஇல்லைன்னா செத்துப் போயிடுவ.
செத்தாலும் தப்பில்லை, நீயெல்லாம் எதுக்கு உயிரோட இருக்கனும்!