Thursday, May 16, 2019

அத்வானிக்கு ஒன்னும் தெரியாதுப்பா . .




மோடி அடித்து விட்டு மாட்டிக் கொண்ட அந்த பேட்டியை   இன்னொரு முறை பார்த்தேன்.

டிஜிட்டல் காமெரா மற்றும் ஈமெயில் பற்றிய கதை விடுதலில் அவர் சொல்லியது  தொடர்பாக எனக்கு தோன்றிய ஒரு சின்ன சந்தேகத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

தன்னுடைய டிஜிட்டல் காமெராவில் படம் எடுத்து ஈமெயிலில் டெல்லிக்கு அனுப்பிய போது “மறு நாளே வண்ணப்படத்தைப் பார்த்து அத்வானி அசந்து போனதாகவும், இது எப்படி சாத்தியம் என்று கேட்டுக் கொண்டே இருந்ததாகவும்  மோடி சொல்கிறார்.

அன்றைய தினம் பாஜக கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்த, மொரார்ஜி தேசாய் காலத்தில் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவே கூட இருந்த எல்.கே.அத்வானிக்கு எந்த வித தொழில் நுட்ப ஞானமும் புதிய வசதிகள் குறித்த அப்டேஷனும்  தன்னளவுக்குக் கூட இல்லை  என்று  குத்திக் காண்பிக்கும் நோக்கம் இருக்குமோ என்பது ஒரு  சந்தேகம்.

அதே போல இன்னொரு சந்தேகம்

ஒரு அனுப்புனர் இருந்தால்  ஒரு பெறுனரும் இருக்க வேண்டுமல்லவா?

அப்போ மோடி அனுப்பிய ஈமெயிலைப் பெற்றவரும் மோடிக்கு இணையாக தொழில் நுட்ப அறிவு படைத்தவராக இருக்க வேண்டுமல்லவா?

அப்படி என்றால் இவர் மட்டும் தான் அப்டேட்டட் என்று  எப்படி பீற்றிக் கொள்ள முடியும்?

2 comments:

  1. அத்வானிக்கு ஒன்னும் தெரியாது
    மோடிக்கு கேள்வி கேட்டல் பதில் சொல்ல தெரியாது

    ReplyDelete
  2. அத்வானிக்கு மட்டுமல்ல மோடிக்கும் கூட ஒன்னும் தெரியாது

    ReplyDelete