எடப்பாடியின்
திமிர் அடங்க வேண்டும்
எட்டு
வழிச்சாலையை வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழு விவசாயிகள் மட்டும்தான் எதிர்க்கிறார்களாம்.
சாகுபடி செய்து வரும் இதர விவசாயிகள் தங்கள் நிலத்தைக் கொடுக்க தயாராகத்தான் இருக்கிறார்களாம்.
அந்த சாலை இல்லாவிட்டால் எல்லாம் நாசமாகப் போய்விடுமாம்.
இப்படிச்
சொல்வது யார்?
யானை
மாலை போட்டதால் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர், மகாராணியான “சரஸ்வதி சபதம்” கதை போல
சசிகலா
சிறைக்குப் போகும் முன்பு ஒரு குழந்தை போல தவழ்ந்து
போய் சசிகலா காலிலே மண்டியிட்டு விழுந்து முதல்வர் பதவியை பெற்ற எடுபிடி பழனிச்சாமி.
உயர்
நீதிமன்றம் தடை செய்துள்ள ஒரு திட்டத்தை, தேர்தல் பிரச்சாரத்தின் போது வாய் திறக்காமல்
இருந்து விட்டு, வாக்கு எண்ணிக்கை துவங்கும் முன்பாக பேசினால் அதை திமிர் என்று சொல்லாமல்
வேறெப்படி அழைப்பது?
நிதின்
கட்கரியிடம் வாங்கிய காசுக்கு விசுவாசமாக வாலாட்டுகிறாரா எடுபிடி?
நேற்றே
ஒரு கிராமத்திலேயே ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி
தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள்.
தடை
உத்தரவு பெற நாங்கள் தொடுத்த வழக்குதான் காரணம் என்று பீற்றிக் கொள்ளும் டாக்டரய்யாக்கள்
எடுபிடியின் திமிர்ப் பேச்சுக்கு ஏன் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்?
கட்காரியின் கவனிப்பு வளையத்துக்குள் அவர்களும் வந்து விட்டார்களா?
ஆட்சியின்
உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் போதே எடுபிடிக்கு இவ்வளவு ஆணவம் என்றால் தப்பித்தவறி
பிழைத்து விட்டால் ஆட்டம் ஓவராகி விடும்.
போராட்டத்தின்
மூலம் எடுபிடியின் திமிரை அடக்க தயாராவோம்.
No comments:
Post a Comment