Tuesday, May 7, 2019

என்ன நடக்குது சுப்ரீம் கோர்ட்டில?


வேட்டையபுரம் அரண்மனையை விட மர்ம மாளிகையாகி விட்டது உச்ச நீதி மன்றம்.

எரிக்ஸன் தொடுத்த அவதூறு வழக்கில் அனில் அம்பானிக்கு கொடுத்த உத்தரவை அப்படியே உல்டா செய்து உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் பதிவு செய்து இரண்டு துணை பதிவாளர்கள் பணி நீக்கம் அடைந்தார்கள்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஊழியர் தலைமை நீதிபதி மீது பாலியல் சீண்டல் புகார் கொடுக்கிறார். தன் மீதான வழக்கை தானே விசாரித்த விபரீதம் தொடக்கத்தில் நடைபெறுகிறது. பிறகு ஒரு குழு அமைக்கப்படுகிறது. அதிலே ஒரு நீதிபதி மீது நம்பிக்கை கிடையாது என்று அறிவிக்க, அவர் மாற்றப்பட்டு வேறு ஒரு பெண் நீதிபதி வருகிறார். ஆனாலும் அந்த வழக்கு விசாரணைக்கு அந்தப் பெண் வராமல் அறிக்கைகளை மட்டும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

தலைமை நீதிபதி மீதான வழக்கை நடத்த ஒன்றரை கோடி ரூபாய் வரை பேசப்பட்டதாக ஒரு வழக்கறிஞர் கூறிய புகார் இன்னொரு கதை.

ரபேல் வழக்கு, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு இரண்டையுமே மே ஆறு அன்று விசாரிப்பதாக தலைமை நீதிபதி உத்தரவிடுகிறார்.

ஆனால் நீதிமன்ற ஆணையிலோ ரபேல் வழக்கும் ஆறாம் தேதியும் ராகுல் காந்தி வழக்கு பத்தாம் தேதி நடக்கும் என்று போடப்பட்டுள்ளது. 

ஏன் இந்த குழப்பங்கள்?
இவையெல்லாம் தற்செயலான தவறுகளா?
நீதித்துறையை ஆக்கிரமிக்கும் சதிச் செயல்களா?

இப்படிப் பட்ட நிகழ்வுகள் நிச்சயம் சரியில்லை. 
ஏற்கனவே ஏராளமான சுயேட்சையான அமைப்புக்கள் மத்தியரசின் பிடிக்குள் சிக்கி தவிக்கிறது.
நீதித்துறையும் செல்வது இந்திய ஜனநாயகத்திற்கு சமாதி கட்டுவதற்கான முதல் படியாகவே இருக்கும். 

2 comments:

  1. உண்மையில் சார் ரொம்ப குழப்பமாக இருக்கு

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete