Saturday, May 18, 2019

மோடியின் இறுதி சாதனை




தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லாவசா, மோடி மற்றும் அமித் ஷா மீதான தேர்தல் நடத்தை விதி மீறல் குற்றச்சாட்டுக்கள் பிரச்சினைகளில் தன்னுடைய எதிர்க்கருத்து பதிவு செய்யப்படாததைக் கண்டித்து இனி தான் தேர்தல் ஆணையக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.

ஐந்தாண்டு கால ஆட்சியில் மோடி இறுதியாக படைத்துள்ள சாதனை இது.

சுயேட்சையான அமைப்புக்களை சீரழிப்பது என்பதுதான் மோடி தன் ஆட்சிக்காலத்தில் செய்த ஒரே சாதனை.

திட்டக்கமிஷன் என்ற அமைப்பை கலைத்து விட்டு “நிதி ஆயோக்” கொண்டு வந்தார். அதன் மீதான அரசு தலையீடுகளைக் கண்டித்து நிதி ஆயோக்கில் இயக்குனராக இருந்த பலரும் ராஜினாமா செய்து விட்டனர்.

ரிசர்வ் வங்கி இயக்குனராக இருந்த ரகுராம் ராஜனை துரத்தி விட்டு தன்னுடைய ஆளான உர்ஜித் படேலை கொண்டு வந்தார். அவராலும் மோடியை தாக்கு பிடிக்க முடியாமல் பதவியை விட்டு ஓடி விட்டார்.

வெளிப்படைத் தன்மை இல்லை என்று இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக நான்கு உச்ச நீதி மன்ற நீதிபதிகளை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி சொல்ல வைத்தார்.

சி.பி.ஐ கூத்து பற்றி சொல்லவே வேண்டாம். இயக்குனருக்கும் கூடுதல் இயக்குனருக்கும் குடுமி பிடி சண்டை. புதிதாக நியமிக்கப்பட்ட இயக்குனரோ இவர்களை விட பெரிய உத்தம சிகாமாணி.

இப்போது கடைசியாக ஒரு தேர்தல் ஆணையரே போர்க் கொடி தூக்கி விட்டார்.



ஆக, அமைப்புக்களை நாசம் செய்த மோடியின் சாதனையை போய் எல்லோரிடமும் சொல்லுங்கள், அழகு ராஜா அதைத்தான் விரும்புகிறார்.

No comments:

Post a Comment