Thursday, May 16, 2019

(இளைய) ராஜ வரலாற்றின் துவக்கப்புள்ளி இது







எங்கள் கோட்டத்தின் முது நிலை கோட்ட மேலாளராக இருந்த திரு வி.சுப்ரமணியன் அவர்களின் முக நூல் பக்கத்தில் பார்த்துத்தான் நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் அன்னக்கிளி வெளியானது என்ற தகவலை தெரிந்து கொண்டேன்.

அந்த நாளை மற்றும் ஒரு நாள் என்று ஒதுக்கி விட முடியாது.

தமிழர்களின் வாழ்வோடு கலந்த ஒரு இசை வரலாற்றின் துவக்கப்புள்ளி அந்த நாள்.

மகிழ்ச்சியோ, சோகமோ, உற்சாகமோ, சோர்வோ – எந்த ஒரு மன நிலைக்கும் பொருத்தமான பாடல்களை அளித்துக் கொண்டிருப்பவர். தன் பாடல்கள் மூலமாக சோகத்தையும் சோர்வையும் போக்கக் கூடியவர்.

நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசை, ஹிந்துஸ்தானி இசை, கர்னாடக இசை என்று  அனைத்து இசை வடிவங்களையும் தமிழில் அளித்தவர். பல வடிவ இசைகளின் பாலமாகவும் அமைந்தவர்.

எந்த ஒரு பயணமும் இவர் துணையின்றி சுவைக்காது.

தமிழ்த் திரை இசையின் அடையாளமான இசைஞானி  இளையராஜாவின் இசை வரலாற்றில் முதலில் பதிவு செய்யப்பட்ட பாடலின் காணொளியை மகிழ்ச்சியோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.




No comments:

Post a Comment