வாரணாசி
தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட நினைத்த தேஜ் பகதூர் யாதவை சமஜ்வாடிக் கட்சி இப்போது
தன்னுடைய கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது.
தேஜ்
பகதூர் யாதவை நினைவிருக்கிறதல்லவா?
செல்லா
நோட்டு விவகாரத்தின் போது கடும் அவதிக்குள்ளான மக்களிடம் காவிக்கயவர்கள் “எல்லையிலே
ராணுவ வீரர்கள் தேசத்திற்காக தியாகம் செய்து பணியாற்றி நாட்டைக் காக்கையிலே, இந்த கஷ்டம் கூட உன்னால பட
முடியாதா என்று வெட்டி உபதேசம் செய்து கொண்டிருந்தார்கள்.
அந்த
சமயத்தில்தான் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் ஒரு காணொளியை வெளியிட்டார்.
நாட்டை
பாதுகாக்க எல்லையிலே இன்னல்களோடு பணியாற்றும் வீரர்களுக்கு அரசு கொடுக்கும் உணவின்
லட்சணத்தை பாருங்கள் என்று ராணுவத்தில் நடைபெறும் ஊழல்களை அம்பலப்படுத்தினார்.
அவருடைய
குற்றச்சாட்டை சகித்துக் கொள்ள முடியாமல் அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று குற்றம்
சுமத்தி பணி நீக்கம் செய்தார்கள்.
அவர்
இப்போது மோடிக்கு எதிராக தேர்தல் களம் காண்கிறார்.
நாட்டை
உண்மையாகவே பாதுகாத்தவர் வெல்ல வேண்டும். போலிக் காவல்காரன் தோற்க வேண்டும்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteவேட்பு மனுவை தள்ளுபடி செஞ்சுட்டாங்க ப்ராடு பசங்க
ReplyDelete