Friday, May 10, 2019

கௌதம் கம்பீரின் காக்கா பிரியாணி




தரந்தாழ்ந்து போன கேவல அரசியல்



கிழக்கு டெல்லி தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டியிடுகிறார். அதிஷி என்ற கல்வியாளர் ஆம் ஆத்மி சார்பாக போட்டியிடுகிறார்.

அவரைப் பற்றி மிக மிக இழிவான ஒரு துண்டுப் பிரசுரம் ஒன்று வினியோகிக்கப்பட்டுள்ளது. அதை படித்துப் பார்க்கையில் படு கேவலமாக இருந்தது.  அதை இங்கே பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை.

அந்த பிரசுரத்தில் அந்த வேட்பாளரை இழிவு படுத்துவதோடு மட்டுமல்லாமல் சங்கிகளின் மரபுப்படி கிறிஸ்துவர்கள், தலித்கள், மாட்டிறைச்சி உண்பவர்கள், கலப்புத் திருமணம் செய்பவர்கள் என அனைவரையும் இழிவு படுத்தியுள்ளார்கள்.

தேர்தல் வெற்றிக்காக எவ்வளவு கீழ்த்தரமாக இறங்க முடியும் என்பதற்கு இந்த பிரசுரம் ஒரு உதாரணம்.

இந்த பிரசுரத்தை வெளியிட்டது யார்?

கௌதம் கம்பீர் இந்த அளவிற்கு இறங்குவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று அரவிந்த் கேஜ்ரிவால் சொல்ல, பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிஷி வெடித்து அழுதுள்ளார். ஒரு பெண் மீது

ஆனால்

கௌதம் கம்பீர் அதை மறுத்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியே நாடகம் போடுவதாக குற்றம் சுமத்தி அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பல சவால்கள் விட்டுள்ளார். அதற்காக அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் கொஞ்சமும் நாகரீகம் இல்லை. அவருடைய தரம் அவரது வார்த்தைகளிலேயே வெளிப்பட்டுள்ளது.

அரவிந்த் கேஜ்ரிவால் என்று மட்டுமல்ல. கம்பீரிடம் அணுகுமுறைக் கோளாறு உள்ளது என்பதை தன் புத்தகத்தில் சுட்டிக் காட்டியிருந்த  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷஹித் அப்ரிடிக்கு பதிலடி கொடுத்திருந்த கௌதம் கம்பீரின்  வார்த்தைகளும் மோசமாகத்தான் இருந்தது.  அப்ரிடியின் விமர்சனத்தை நிரூபிப்பதாகவும் கூட.

எனவே அதிஷி மீதான அந்த மோசமான பிரசுரத்தின் பின்னணியில் கம்பீரோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோதான் இருப்பார்கள் என்று சந்தேகம் வருகிறது.

மேலும் இது போன்ற இழிவுப் பிரச்சாரங்கள் செய்வதில் பாஜகவிற்கு நிகர் பாஜகவே.

மோதிலால் நேரு தொடங்கி ராகுல் காந்தி வரை அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றி கேவலமான தரக்குறைவாக வதந்திகளை பல வருடங்களாக பரப்பிக் கொண்டிருப்பவர்கள் அல்லவா அவர்கள்!

காக்கா பிரியாணி சாப்பிட்டால் உண்ணிகிருஷ்ணன் குரல் வராது என்பது போல பாஜகவில் இணைந்த கௌதம் கம்பீரிடம் மட்டும் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியுமா என்ன?

3 comments:

  1. க்ரவுண்டிலேயும் ஒழுங்கீனமாவன் இவன்

    ReplyDelete
    Replies
    1. அப்ரிடி ஒழுக்கமானவனா?
      இம்ரான் கான் ஒழுங்கா ? ஆதாரம் தரவா ?

      Delete
    2. பதிவு கம்பீரைப் பற்றியது. கம்பீரின் அணுகுமுறை பற்றியது.
      இதிலே இம்ரான் கானுக்கு என்ன வேலை? அப்ரிடிக்கு கம்பீர் அளித்த பதில் பற்றியது. டேக் டைவர்ஷன் என்றாலே பதில் சொல்ல துப்பில்லை என்றுதான் அர்த்தம்

      Delete