இதுதான்
ரேடார் சைன்டிஸ்ட் மோடி பற்றிய இறுதிப் பதிவு.
முதலில்
ஒரு சீரியஸான பதிவு
எழுத்தாளரும்
தலைமை ஆசிரியருமான தோழர் இரா.எட்வின் அவர்களுடையது.
மேகமூட்டமாக இருந்திருக்கிறது. மழை பெய்யலாம் என்கிற சூழல்
எனவே இலக்கு தவறக்கூடும். பாதகமேற்படலாம் என்பது அவர்கள் அய்யம்
மேகமூட்டமாக இருப்பதால் ராடாரால் தாக்குதலை கண்டு பாகிஸ்தானுக்கு அறியத்தர இயலாது என்று கருதி
அன்றே நடத்த முடிவெடுத்திருக்கிறீர்கள் மரியாதைக்குரிய மோடி அவர்களே
அது விஞ்ஞானம் படிக்காத பாமரனது சாதனைபோல உருக்கமாக பேசியிருக்கிறீர்கள்
நெஞ்சிலே கைவைத்து யோசியுங்கள்
1) உங்கள் இலக்கு பிசகவில்லையா?
தீவிரவாதிகளில் ஒருவரையேனும்
அழிக்க முடிந்ததா?
பாகிஸ்தானை அச்சப்படுத்தவேனும்
முடிந்ததா?
2) வானிலை பாதகமாயிருந்ததால் பிசகி நம் மக்கள்மீது குண்டுகள் விழுந்திருந்தால்
வெளியே எங்களிடம் வேண்டுமானால் உங்கள் கட்சிக்காரர்கள் மல்லு கட்டுவார்கள். ஆனால் அவர்களேகூட இதை நம்பமுடியாது திரு மோடி
அந்தவகையில் உங்களது சொந்தக்கட்சிக்காரர்களையே நீங்கள் சங்கடப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் செய்கிறீர்களென்பதை அருள்கூரந்து உணருங்கள்
அடுத்து
ஒரு காமெடி
தோழர்
ஆர்.ஷாஜஹான் எழுதியது.
இப்படீ டூர் அடிச்சுட்டே இருந்தேனா... இங்கே சில பேர் கூவ ஆரம்பிச்சுட்டாங்க. மோடி பயணத்துக்கு பல நூறு கோடி ரூபா செலவாகுதுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க தேசத் துரோகிங்க.
இதுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சேன். ஊர் ஊராப் போகவும் வேணும், செலவும் ஆகக்கூடாது. என்ன செய்யலாம்... மண்டையப் பிச்சுகிட்டேன். ஒரு ஐடியாவும் கிடைக்கலே.
ஒருநாள் என் ரெண்டு கையிலும் இருக்கிற ஆள்காட்டி விரல்களை நெத்திப்பொட்டுல வச்சு, ஒரு ஸ்குரூ டிரைவரை எடுத்து முடுக்குற மாதிரி மண்டையில திருகினேன். அப்பதான் ஒரு ஐடியா ஸ்டிரைக் ஆச்சு.
அடுத்த தடவை அமேரிக்காவுக்கு பிளைட்ல போகும்போது அதை செஞ்சு பாத்தேன். செமயா சக்ஸஸ் ஆயிடுச்சு. அது என்னான்னு கேப்பீங்க. சொல்றேன்.
புவி ஈர்ப்புன்னா என்னான்னு உங்களுக்குத் தெரியும். ஜிராவிட்டி. பூமியிலேர்ந்து மேலே போகப்போக ஜிராவிட்டி குறைஞ்சுட்டே போகும் இல்லையா...
ஸோ... ஃபிளைட்டு மேலே ஏறி குறிப்பிட்ட உயரத்துக்குப் போனதும், பைலட்டைக் கூப்பிட்டு என்ஜினை ஆஃப் பண்ணச் சொல்லிட்டேன்.
அவரு பதறிப்போயிட்டாரு. சார் சார்... என்ன சார் சொல்றீங்க... நான் புள்ளைகுட்டிக்காரன்னு அழுதாரு.
ஹாஹாஹஹா... பயப்படாதே தம்பி... நானும் ஒரு அம்மாவுக்குப் புள்ளதான். இப்பவும் அம்மா காசுலதான் சோறு தின்னுட்டிருக்கேன். அது ஒரு விஷயமில்லே. நான் சொல்றதை கவனமா கேளு...
இந்த ஹைட்ல எஞ்சின் நிறுத்தினாலும் மேகத்துக்கு மேலே இருக்கிறதால புவி ஈர்ப்பு எல்லாம் வேலை செய்யாது. பிளைட்டு அப்படியே மிதக்கும். அதே இடத்துல மிதந்துட்டு இருக்கும்.
ஆனா பூமி சுத்திகிட்டுதான் இருக்கும் இல்லையா...? ஸோ... நாம இறங்க வேண்டிய அமேரிக்கா நமக்குக் கீழே வந்ததும் மறுபடி இஞ்சினைப் போடு. அழகா இறங்கிடலாம்னு சொன்னேன்.
சார்... இத்தனை காலமா பிளைட் ஓட்டறேன்... எனக்கே தெரியல. நிசமாவே நீங்க வில்லேஜ் விஞ்சானி சார்...னு அந்தப்பைலட் என் கதறி அழுதுகிட்டு கால்லயே விழுந்துட்டான்.
ச்சேச்சே... எனக்குப் புகழ்ச்சியே பிடிக்காது. எந்திரி எந்திரின்னு எழுப்பி அனுப்பி வச்சேன்.
அப்போதிருந்து, நான் எங்கே போனாலும் பிளைட் மேலே ஏறதுக்கு மட்டும்தான் பெட்ரோல் செலவாகும். அதனால பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாச்சு.
இதெல்லாம் யாருக்குமே நான் இதுவரைக்கும் சொல்லலே. இப்பக்கூட சொல்லியிருக்க மாட்டேன். சொல்ல வச்சுட்டாய்ங்க. எல்லாத்துக்கும் நேருதான் காரணம்.
— படித்ததில் பட்டி டிங்கரிங் பார்த்தது.
இறுதியாக
ஒரு அறிவுரை
எங்கள்
தென் மண்டலக் கூட்டமைப்பின் மூன்னாள் துணைத்தலைவர் தோழர் இ.எம்.ஜோசப் அவர்கள் அளித்தது.
நமக்கு எதுவெல்லாம் தெரியும் என்பதை விட, எதுவெல்லாம் தெரியாது என்பது குறித்து கூடுதல் கவனம் தேவை...இல்லையேல், நமது அறியாமையினை கண்டுணரும் ரேடார்களிடம் சிக்கிக் கொள்ள நேரிடும்.
ரேடார்
சைன்டிஸ்ட் பற்றிய பதிவுகள் இத்துடன் நிறைவுற்றது. அடுத்த பதிவுகளுக்கான செய்திகளை
மோடி உடனே அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
No comments:
Post a Comment