Thursday, May 30, 2019

எல்லையைக் காத்தால் இதுதான் கதி



ஆங்கில இந்து இதழின் முதல் பக்க செய்தி இது.

முகமது சனாவுல்லா - அஸ்ஸாமைச் சேர்ந்த இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். கார்கில் போரில் இவர் வெளிப்படுத்திய தீரத்திற்காக கௌரவ லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டவர். ராணுவ சேவைக்குப் பிறகு அஸ்ஸாம் எல்லைக் காவல் படையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர்.

இதெல்லாம் நேற்று முன் தினம் வரைதான்.

இன்று எங்கே இருக்கிறார்?

சிறைச்சாலையில்

ஏன்?

ஏதாவது ஊழல் செய்தாரா?
கொலை, கொள்ளை ஏதாவது?
பாலியல் வன் கொடுமை?

இல்லை, எதுவுமே இல்லை.

இவர் இந்தியக் குடிமகன் கிடையாது என்று தீர்மானிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்ப்பட்டுள்ளார்.

ராணுவத்திலும் காவல்துறையிலும் பணியாற்றிய ஆவணங்கள் எல்லாம் வெறும் செல்லாக்காசாகத்தான் மதிக்கப்பட்டுள்ளது. 

ஏன்?

அவர் பெயரே சொல்லும் காரணத்தை.

அஸ்ஸாமில் மதத்தின் அடிப்படையில்தான் குடிமகன் அந்தஸ்து முடிவு செய்யப்படும் என்று அமித் ஷா பேசியது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த லட்சணத்தில் சந்தான பாரதிதான் உள்துறை அமைச்சராகப் போவதாக வேறு சொல்லிக் கொள்கிறார்கள்.

சினிமாவில் நடக்கும் விபரீதம் இந்தியாவில் நிஜத்திலும்.

கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் சடலங்களின் மீதுதான் மோடி இன்று மீண்டும் பதவி ஏற்கப் போகிறார்.

ஆனால் ராணுவ வீரர்களை துச்சமாக மதிக்கும் கேடு கெட்ட கூட்டம் இதுதான்.




4 comments:

  1. அசாமில் பங்களாதேஷ் வந்தேறி குடிகளை வெளியேற்றுவதை ஆதரிக்கின்றேன்
    அதேவேளை
    இவரை போன்ற உண்மையான இந்திய குடிமக்களின் விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பதனையும் ஏற்றுக்கொள்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. அமித் ஷா போன்ற அராஜகவாதிகள் இருக்கும் வரை இப்படித்தான் நடக்கும்

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete