முடியலை
மோடி.
தயவு
செஞ்சு நீங்க இந்தியாவிலேயே இருக்க வேண்டாம். வழக்கம் போல நாடு நாடா
சுத்திக்கிட்டே இருங்க.
இந்தியாவிலே
இருந்தால் நீங்க எவ்வளவு பெரிய முட்டாள்னு ஒவ்வொரு நாளும் நிரூபிச்சுக்கிட்டே
இருக்கீங்க.
ஐம்பது
நாளில் கறுப்புப்பணத்தை ஒழிக்காவிட்டால் என்னை உயிரோடு தீயிட்டுக் கொளுத்துங்கள்
என்ற உங்கள் வசனத்தை ஆளுக்காள் நினைவுபடுத்தும் போதே உங்களிடமிருந்து அடுத்த
முட்டாள்தனத்தை எதிர்பார்த்தேன்.
அது
போலவே வந்து விட்டது. அறிவிப்பிற்குப் பதிலாக அவசரச்சட்டமே கொண்டு வந்து
விட்டீர்கள்.
மார்ச்
31 க்குப் பிறகு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால் நான்கு வருடங்கள்
சிறைத்தண்டனை என்று சொல்லியுள்ளீர்கள்.
சாதாரண
மனிதர்களைப் பொறுத்தவரை டிசம்பர் முப்பதிற்குப் பிறகு 500, 1000 ரூபாய்
நோட்டுக்கள் வைத்திருந்தால் அது வெறும் காகிதம்தான். வெற்று காகிதத்தை
வைத்திருப்பவர்களுக்கு நாலு வருடம் சிறை என்பது அபத்தமாகத் தெரியவில்லையா?
செல்லாத
நோட்டு என்று அறிவிப்பதற்கு முன்பாக மக்களுக்கு அவகாசம் கொடுத்திருக்கலாமே
என்றபோது எப்படி எல்லாம் சீறிப்பாய்ந்தீர்கள்? துல்லியமான தாக்குதல் என்றெல்லாம்
டயலாக் விட்டீர்கள்.
இப்போது
மூன்று மாத அவகாசம் கொடுத்துள்ளீர்கள். கணக்கில் காட்ட முடியாத கறுப்புப்பணத்தை
ரொக்கமாக செல்லாத நோட்டுக்களாக வைத்துள்ளவர்கள் அதை இனிமேல் மாற்றுவார்களா?
அப்படியே எரித்து விட மாட்டார்களா? அப்படி என்றால் இது மொண்ணைத் தாக்குதலா? கறுப்புப்
பணம் உள்ள செல்வந்தர்கள் அதனை ஏற்கனவே மாற்றி விட்டார்கள் என்பதுதான் கட்டுகட்டாக
பிடிபடும் புதிய இரண்டாயிரம் ரூபாய் கட்டுக்களில் இளிக்கிறதே!
அம்பானியின்
எடுபிடியும் உங்களின் ஆலோசகராகவும் உள்ள உர்ஜித் படேல் ஆளுனராக உள்ள ரிசர்வ் வங்கி
சொல்லியுள்ள புள்ளி விபரங்கள்படி நவம்பர் எட்டு அன்று புழக்கத்தில் இருந்த 500,
1000 ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் வங்கிகளுக்கு ஏற்கனவே வந்து சேர்ந்து விட்டது.
கறுப்புப்பணம் என்ற உங்கள் வாதச்சாயம் வெளுத்துப்போய் ரொக்கமில்லா பரிவர்த்தனை
என்று பேடிஎம் போன்ற நிறுவனங்களின் தரகராக மாறியுள்ளீர்கள்.
உங்களின்
அறிவிப்புக்கள் எல்லாமே இப்படி வெற்று முழக்கங்களாக மட்டுமே இருக்கிறதே, ஏன்
இப்படி?
நீங்கள்
மட்டும்தான் முட்டாளா மிஸ்டர் மோடி? இல்லை உங்களை சுற்றி இருக்கிற எல்லோருமே
முட்டாள்கள்தானா?
இந்திய
வரலாற்றில் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு இடம் உண்டு.
அது
எப்படி என்று என் வாயால் மீண்டும் சொல்ல வேண்டுமா?
கடைசியிலிருந்து
மூன்றாவது வரியை மீண்டும் படியுங்கள்.
Sir ,
ReplyDeleteMy friend works in a government aid private polytechnic. They did not given salary for last 4 months.What needs to be done ?
Thanks
Organize and Struggle. Please ask him to contact the teachers association. If there is no, contact CITU
ReplyDeleteThanks.Will do,
ReplyDelete