Sunday, December 11, 2016

பாரதி - என்றும் இன்றும்

முண்டாசுக் கவிஞனின் பிறந்தநாள் இன்று.

விடுதலை உணர்வு, பெண் விடுதலை என்று எத்தனையோ பொருட்கள் பற்றி ஏராளமான பாடல்களை எழுதி இருந்தாலும் என்னுடைய மனதிற்கு நெருக்கமான பாடலும் எழுச்சி தருவதும் இதுதான்.






இன்றைய அரசியல் சமூகச் சூழலுக்கு அவசியம் தேவைப்படுகிற பாடல் கீழே உள்ளது. நேர்மைத் திறமுமின்றி நடிப்பவர்கள் பலர் வலம் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் அவர்களை சிலர் நம்பிக் கொண்டிருப்பதும்தான் இன்றைய அவலம் 

நடிப்புச் சுதேசிகள்

நெஞ்சில் உரமுமின்றி்
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ -- கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடீ.

கூட்டத்திற் கூடிநின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ -- கிளியே
நாளில் மறப்பா ரடீ.

சொந்த அரசும்புவிச்
சுகங்களும் மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ? -- கிளியே
அலிகளுக் கின்ப முண்டோ?

கண்கள் இரண்டிருந்தும்
காணுந் திறமையற்ற
பெண்களின் கூட்டமடீ -- கிளியே
பேசிப் பயனென் னடீ.

யந்திர சாலையென்பர்
எங்கள் துணிகளென்பர்
மந்திரத்தாலே யெங்கும் -- கிளியே
மாங்கனி வீழ்வ துண்டோ?

உப்பென்றும் சீனிஎன்றும்
உள்நாட்டுச் சேலைஎன்றும்
செப்பித் திரிவா ரடீ -- கிளியே
செய்வ தறியா ரடீ.

தேவியர் மானம் என்றும்
தெய்வத்தின் பக்திஎன்றும்
நாவினாற் சொல்வ தல்லால் -- கிளியே
நம்புத லற்றா ரடீ.

மாதரைக் கற்பழித்து
வன்கண்மை பிறர்செய்யப்
பேதைகள் போலுயிரைக் -- கிளியே
பேணி யிருந்தா ரடீ.

தேவி கோயிலிற் சென்று
தீமை பிறர்கள்செய்ய
ஆவி பெரிதென்றெண்ணிக் -- கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ.

அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டா ரடீ -- கிளியே
ஊமைச் சனங்க ளடீ.

ஊக்கமும் உள்வலியும்
உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் -- கிளியே
வாழத் தகுதி யுண்டோ?

மானம் சிறிதென்றெண்ணி
வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் -- கிளியே
இருக்க நிலைமை யுண்டோ?

சிந்தையிற் கள்விரும்பிச்
சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார் -- கிளியே
மனதி லதனைக் கொள்ளார்.

பழமை பழமையென்று
பாவனை பேசலன்றியன
பழமை இருந்தநிலை -- கிளியே
பாமர ரேதறிவார்?

நாட்டில் அவமதிப்பும்
நாணின்றி இழிசெல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே -- கிளியே
சிறுமை யடைவா ரடீ.

சொந்தச் சகோதரர்கள்
துன்பத்திற் சாதல்கண்டும்
சிந்தை இரங்கா ரடீ -- கிளியே
செம்மை மறந்தா ரடீ.

பஞ்சத்தும் நோய்களிலும்
பாரதர் புழுக்கள்போல்
துஞ்சத் தம் கண்ணாற் கண்டும் -- கிளியே
சோம்பிக் கிடப்பா ரடீ.

தாயைக் கொல்லும்பஞ்சத்தைத்
தடுக்க முயற்சியுறார்
வாயைத் திறந்து சும்மா -- கிளியே
வந்தே மாதர மென்பார்.

2 comments:

  1. நினைக்கப்படவேண்டிய, போற்றப்படவேண்டிய நாள்.

    ReplyDelete
  2. இன்றைய அவலம்..உண்மைதான் . பாரதியை அறிந்தால் மாற்றம் வரலாம்...

    ReplyDelete