Friday, December 2, 2016

65 லட்சம் மாத்தியாச்சா ஜி?




31.12.2015 அன்று நிதியமைச்சர் கைவசம் இருந்த ரொக்க தொகை ரூபாய் அறுபத்தி ஐந்து லட்சமாம். 

எட்டு நவம்பருக்கு முன்பாக அதை கண்டிப்பாக மாற்றியிருப்பார் என்பதில் சந்தேகமே தேவையில்லை.

ரொக்கம் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற மோடியின் கருத்தை அவருடைய நிதியமைச்சரே மதிக்கவில்லை என்பதற்கு இந்த தகவலே சான்று.

மத்தியமைச்சர, அதுவும் நிதியமைச்சரே தனது சேமிப்பை (பெரிய பெரிய கம்பெனிகளுக்காக வாதாடி கிடைத்த நேர்மையான கட்டணம் என்றே எடுத்துக் கொள்கிறேன்) ரொக்கமாக வைத்திருக்க விரும்புகிறார் எனும் போது சாதாரண மக்களை இப்படி அவதிப்படுத்துவது நியாயமா?

மோடியின் மந்திரியே ரொக்க பரிவர்த்தனைகளை விரும்புகையில் நமக்கெதற்கு கிரெடிட், டெபிட் கார்டுகள், பேடியெம் எழவெல்லாம்?

தூக்கி எறியுங்கள் 

மோடியின் முகத்தில் என்ற்ய் நீங்களாகவே கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. 

No comments:

Post a Comment