Tuesday, December 13, 2016

அசிங்கமாய் பேசுவதில் இருவருமே . . . .




செல்லா நோட்டு விவகாரத்தில் மம்தா பானர்ஜி மோடியை கடுமையாக விமர்சித்து வருவதால்

"நாங்கள் நினைத்திருந்தால் மம்தா டெல்லிக்கு வந்த போது அவர் தலைமுடியை பிடித்து இழுத்து வெளியே தள்ளியிருக்க முடியும். டெல்லி காவல்துறை  எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஆனாலும் நாங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டோம்"

என்று அநாகரீகமாக பேசியது யார் தெரியுமா?

பாரதீய ஜனதா கட்சியின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் திலீப் கோஷ்.

அசிங்கமாக பேச பாஜக ஆட்களுக்கு சொல்லித்தர வேண்டுமா என்ன?

"தேசத்துரோகி, பாகிஸ்தானுக்கு போ, கருப்புப்பண பதுக்கல் பேர்வழி, அரபிக்கடலில் விழுந்து செத்துப் போ, முறை தவறிப் பிறந்தவர்கள், நாய்கள்" 

இப்படி எத்தனை வசைகளை தங்களை எதிர்ப்பவர்களுக்கு கொடுத்துள்ளார்கள் !. 

மூன்றாம் தர அரசியல் என்று திரிணாமுல் ஆட்கள் திருப்பித் தாக்க ஆரம்பித்து விட்டார்கள். 

ஒரு பெண்ணை இழிவாக பேசியது கண்டனத்திற்குரியது. மம்தா பானர்ஜியை சொல்லியிருந்தாலும் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த நபரை பாஜக கட்சியிலிருந்து நீக்க வேண்டும். ஆனால் செய்ய மாட்டார்கள், ஏதாவது புது பதவி கொடுத்தால் கூட வியப்பில்லை.

இந்த விஷயத்தில் பாஜகவை கண்டிக்கும் அருகதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு உண்டா?

கொல்கத்தா நகரில் திரிணாமுல் குண்டர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பெண்ணை பாலியல் தொழில் செய்பவர் என்று கேவலமாக பேசியவர்தான் மம்தா பானர்ஜி. 

மார்க்சிஸ்ட் கட்சியினரின் குடும்பப் பெண்களை எனது குண்டர்கள் கடத்திக் கொண்டு போய் பாலியல் வன்புணர்ச்சி செய்வார்கள் என்று ஒரு பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஒருவர் பேசியதை ரசித்தவரும் மம்தாதான்.

அசிங்கமாக, ஆபாசமாக, அராஜகமாக, அயோக்கியத்தனமாக பேசுவதிலும் நடந்து கொள்வதிலும் இரண்டு கட்சிகளுமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.

இப்போது அவர்கள் மோதிக் கொள்வது கூட ஏதோ ஒரு டீலிங் முடியாமல் இருப்பதனால் கூட இருக்கலாம். அது முடிந்து விட்டால் "அருமைச் சகோதரி, அன்பு அண்ணன்" என்று நாளையே குலாவிக் கொள்ளலாம். இருவரும் சேர்ந்து கொண்டு இன்னும் அதிகமாய் மக்களை ஏமாற்றலாம். 

அதையும் நாம் பார்க்கத்தானே போகிறோம். 

No comments:

Post a Comment