Monday, December 26, 2016

நேதாஜியை ஏண்டா அசிங்கப்படுத்தறீங்க????





அம்மா இடத்தில சின்னம்மாவா இல்லை ஓபிஎஸ்ஸா என்பதெல்லாம் உங்க கட்சிப் பிரச்சினை. இதற்காக

நீங்க மொட்டை அடிச்சுக்குங்க இல்லை தலையையே வெட்டிக்குங்க.

நாக்குல அலகு குத்துங்க இல்லை நாக்கை வெட்டி நாய்க்கு போடுங்க.

தேர் இழுங்க இல்லை தெருவில உக்காந்து பிச்சை எடுங்க.

மண் சோறு சாப்பிடுங்க இல்லை மானம் கெட்டவங்க நாங்கன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டுங்க.

நேதாஜி மாதிரியெல்லாம் வேஷம் போட வச்சு அந்தம்மா முன்னாடி நிக்க வச்சு அவரை அசிங்கப்படுத்தறீங்க.

பாவம் அப்துல் கலாம் வேற ஒரு ஓரத்துல நிக்கறாரு.

நல்ல வேளை காந்தி, நேரு எல்லாம் தப்பிச்சிட்டாங்க.

உங்க அடிமை புத்தியை காண்பிக்கத்தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வேஷம் போட்ட ஆட்களை கொண்டு வந்துட்டீங்க. அது போதாதா?

உங்க கட்சி பஞ்சாயத்துக்கெல்லாம் இனிமே மத்தவங்களை இழுக்காதீங்க.


2 comments:

  1. அதுவும் குறிப்பாக தேசியத் தலைவர்களை அவமதித்தல் தவறு.

    ReplyDelete
  2. அது தானே எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வேஷமே போதுமே!

    ReplyDelete