Tuesday, December 6, 2016

முதல் முறையாக காவல்துறைக்கு பாராட்டுக்கள்




ஜெ அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு விட்டது. பல லட்சம் மக்கள் திரண்ட மிகப் பெரும் நிகழ்வு இது.

ஜெ காலமானார் என்று செய்தியை முந்தித்தரும் வேகத்தில் தந்தி பாண்டே ஒரு குளறுபடி செய்ய, அவருக்கு இன்னும் சிகிச்சை அளிக்கப் படுவதாக அப்பல்லோ சொல்ல அதிமுக தொண்டர்கள் மனதில் சிறு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

அவர்கள் இடிந்து போகும்படி நள்ளிரவில் அதிகாரபூர்வ செய்தி வந்தது. முதல்வரின் மரணம், நம்பிக்கைக்கு விழுந்த அடி ஆகியவற்றால் வரும் கோபம் என்ன விளைவுகளை உண்டாக்குமோ என்று கவலை வந்தது.

எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாமல் நல்லபடியாக அடக்கம் முடிந்து விட்டது. பல லட்சம் மக்கள் சென்னையில் திரண்ட போதும் பெரிய அளவில் தள்ளுமுள்ளு எதுவும் நிகழவில்லை. பொதுவாகவே தமிழகம் அமைதியான முறையில் ஜெ விற்கு அஞ்சலி செலுத்தியது.

இதற்கு முழுக்காரணம் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். 

தமிழகக் காவல்துறைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

பின் குறிப்பு : முதல் முறையாக காவல்துறையை பாராட்டி எழுதுகின்றேன் என்று நினைக்கிறேன். இன்று அவர்கள் வெளிப்படுத்திய செயல் திறனை எல்லா விஷயங்களிலும் காண்பித்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கமும் இல்லாமலில்லை. 

5 comments:

  1. பிப்ரவரி 2016 மகாமகத்தின்போது காவல்துறையின் சேவையைக்கண்டு பிரமித்து நின்றோம். தாங்கள் கூறியதுபோல இக்காலகட்டத்தில் காவல்துறையின் சேவை அளப்பரியது. தொண்டர்களும் நிதானமாக நடந்துகொண்டார்கள் என்று கூறவேண்டும்.

    ReplyDelete
  2. காவல் துறையினரைப் போற்றியே ஆக வேண்டும் ஐயா
    சீரிய பணியினைச்செல்லனே செய்திருக்கிறார்கள்
    பாராட்டுவோம்

    ReplyDelete
  3. /செல்லனே/
    தவறுதலாக தட்டச்சு செய்துவிட்டேன்
    செவ்வனே என்பதுதான் சரியான வார்த்தை ஐயா

    ReplyDelete
  4. aiadmk cadre behaved responsibly and no untoward incidents happened in chennai city and police
    handled the situation superbly once again proving that law and order under AIADMK regime
    is the best.

    ReplyDelete
  5. //அவர்கள் இடிந்து போகும்படி நள்ளிரவில் அதிகாரபூர்வ செய்தி வந்தது. முதல்வரின் மரணம் நம்பிக்கைக்கு விழுந்த அடி ஆகியவற்றால் வரும் கோபம் என்ன விளைவுகளை உண்டாக்குமோ என்று கவலை வந்தது.//
    அவர்களின் விருப்பத்துகுரிய முதல்வர் மரணமடைந்தால், தங்கள் நம்பிக்கைக்கு விழுந்த அடி என்று கோபமடைந்து கலவரம் செய்வார்களேயானால், அவர்கள் டாஸ்மாக் அருந்தி போதையில் உள்ளவர்களை விட மோசமானவர்கள்.

    ReplyDelete