ஜெ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அனைத்துக் கட்சிகளைச்
சேர்ந்தவர்களும் மருத்துவமனைக்குச் சென்றார்கள். அது போலவே அவர் இறந்து போன போதும்
அனைத்துக் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தச் சென்றார்கள்.
கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அது போலவே நிகழ்ந்தது.
அதிமுகவின் தம்பிதுரையும் ஜெயகுமாரும் வந்தார்கள்.
தமிழகத்தில் பல்லாண்டுகளாக வழக்கொழிந்து போன அரசியல் நாகரீகம் மீண்டும்
மலர்கிறதோ என்ற நம்பிக்கை உருவான போது அதன் மீது அமிலம் வீசுவது போல அமைந்து
விட்டது வைகோ மீதான தாக்குதல்.
வைகோ மீது திமுகவினர் கோபத்தில் உள்ளார்கள் என்பதும் அவரை அனுமதிக்கக்
கூடாது என்று கொந்தளிப்போடு இருந்தார்கள் என்பதும் அவர் அறியாதது அல்ல. ஏனென்றால்
அப்பல்லோ மருத்துவமனையிலும் ராஜாஜி ஹாலிலும் அவர் பேசிய பேச்சு அப்படி.
தன்னை வழி மறிப்பார்கள் என்று தெரிந்துதான் அவர் காவிரி மருத்துவமனைக்குச்
சென்றார். அவர் திட்டமிட்டது போலவே நடந்து விட்டது. அவரது நாடக முயற்சிக்கு
திமுகவினர் பலியாகி விட்டனர். அவர்கள் கொஞ்சம் பொறுமையோடு இருந்திருந்தால்
இச்சம்பவத்தைப் பற்றி பேசி பேசி வைகோ அரசியல் ஆதாயமடைவதை தடுத்திருக்கலாம்.
அரசியல் நாகரீகம் என்பது கூட பிழைத்திருக்கும். ஸ்டாலினோ, திமுகவோ வருத்தம்
தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படாமல் இருந்திருக்கும்.
பின் குறிப்பு : நேற்று முன் தினமே எழுதியது.
பின் குறிப்பு : நேற்று முன் தினமே எழுதியது.
அரசியல் அவலம் வைகோ.
ReplyDeleteதெரிந்தே பேசுவார். பேசிவிட்டு அதற்கு இல்லை என்று நாடகம் போடுவார்.
சில மாதம் முன்பு சாதி பற்றி பேசி விட்டு பிறகு இல்லை என்றார்.
அதுதான் தமிழர்களை அடிக்கடி காவு கொடுத்து பல்லாயிரம் கோடி வாங்கி விட்டு இன்னும் ஏன் தமிழர்களை இவர் அழிக்க வேண்டும். இங்கே உணர்ச்சி பேச்சு பிறகு மோடியுடன் கொஞ்சி பேச்சு. யாருக்கு பலிக்குமோ தெரியாது , நிச்சயம் இவருக்கு அறம் தன் வேலையை செய்யும்.
//”வைகோ மீது திமுகவினர் கோபத்தில் உள்ளார்கள் என்பதும் அவரை அனுமதிக்கக் கூடாது என்று கொந்தளிப்போடு இருந்தார்கள் என்பதும் அவர் அறியாதது அல்ல. ஏனென்றால் அப்பல்லோ மருத்துவமனையிலும் ராஜாஜி ஹாலிலும் அவர் பேசிய பேச்சு அப்படி”// அப்பல்லோவிலும் ராஜாஜி ஹாலிலும் வைகோ பேசியது பற்றிய உங்களது கருத்து சரிதான்.ஆனால் அதுமட்டும் தானா?சட்டமன்ற தேர்தலின் போது அதே வைகோ நின்று நிதானித்து என்ன பேசுகிறோம் என்ற முழுப்பரிமாணமும் நன்கறிந்து திமுக தலைவர் சாதியைப்பற்றி பேசியது இதற்கான காரணங்களில் முதன்மையானது இல்லையா?அதை குறிப்பிடுவதில் தயக்கமா?அல்லது மறதியா?
ReplyDeleteவைகோவின் நாடக முயற்சிக்கு திமுக பலியாகி விட்டதாக இப்போது கணிக்கும் தாங்கள் சட்டமன்ற தேர்தலின் முடிவின் போது வைகோவின் நாடகபாணியிலான நடவடிக்கைகள் தான் மக்கள் நலக்கூட்டணியின் பின்னடைவிற்கான காரணமாக நான் விமர்சனம் வைத்த போது ஏற்க மறுத்தீர்களே?(தா.பா தாவி விடுங்களேன்)அவரை வெறுமனே உணர்ச்சிவசப்படுபவராக கருதுவதாக தாங்கள் மென்மையான விமர்சனம் வைத்தது பிழையானது என்பதை உணரமுடிகிறதா?