Thursday, December 1, 2016

இதையாவது சீக்கிரமா கொடுங்க மோடிஜி



ஆண்கள் நூறு கிராம் தங்கம் வைத்திருக்கலாம் என்று சொல்லியுள்ள மேதமை மிகுந்த பிரதமர் மற்றும் அவரது வகையறாக்களுக்கு ஒரு விண்ணப்பம். 

எங்கள் குடும்பத்தில் என்னிடமோ என் மகனிடமோ ஒரு கிராம் தங்கம் கூட கிடையாது.

என் மனைவியிடம் கூட தாங்கள் சொல்லியுள்ள அளவிற்கு ஐந்நூறு (புது ரூபாய் நோட்டில் நீங்கள் அச்சிட்டபடி) கிராம் அளவிற்கெல்லாம் தங்கம் கிடையாது. 

ஆகவே இருநூறு மற்றும் (ஐந்நூறு - கைவசம் ஸ்டாக்) எவ்வளவோ அதை உடனடியாக எங்கள் வசம் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தங்கத்தை தங்கக்காசாகவோ அல்லது தங்க பிஸ்கட்டாகவோ கொடுத்தால் போதுமானது. நகை செய்வதற்கான செய்கூலி, சேதாரம் எல்லாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்.

இதோடு அந்த பதினைந்து லட்சம் கணக்கில் நாற்பத்தி ஐந்து லட்சமும் சேர்த்துக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.

கொஞ்சம் சீக்கிரமா அனுப்பி வையுங்க மோடிஜி
 

No comments:

Post a Comment