Thursday, December 15, 2016

காவிரி முதல் கங்கை வரை




காவிரிக் கரையில் பிறந்தாய்,
கங்கை தீரத்தில் பயின்றாய்,
தேசவிடுதலைப் போரில்
தீவிரமாகக் குதித்தாய்,
கங்கை நதியில் படகில் ஏறி
சைமன் கமிஷனை விரட்டினாய்,

காங்கிரசிலிருந்து சோசலிஸ்டாகி
கம்யூனிஸ்ட்டாக பரிணமித்தாய்
சாதி மறுப்புத் திருமணம் செய்து
பெரியாரையும் பாராட்ட வைத்தாய்,

தமிழில் பட்ஜெட் உரை நிகழ்த்தி
சட்டமன்றத்தில் சாதனை செய்தாய்,
பன்மொழிப் புலமை பெற்றாய்,
நாடெங்கிலும் பொதுமை பேசினாய்,

மும்பைத் தமிழரை பாதுகாக்க
நாடாளுமன்றத்தில் முழங்கினாய்,
கோவில் அறங்காவலர் தேர்தலில்
தலித்துக்கு வாக்குரிமை பெற்றாய்,

தொழிலாளர் பெரும் கூட்டத்தின்
தோன்றாத் துணைவனாய் ஆனாய்,
பொதுவுடமை லட்சியத்துக்காய்
வாழ்நாளை அர்ப்பணித்தாய்,

இந்தியப் புரட்சி வெல்லும் என
நம்பிக்கையோடு நடைபோட்டாய்,
மார்க்சியம் வெற்றிபெறும்,
நாங்கள் வெல்வோம் என்றாய்,

உங்கள் லட்சியம் வெல்ல
நாங்கள் உறுதியேற்கிறோம்.
--------------------தீக்கதிர்


 டிச. 15 தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாள்

நன்றி தீக்கதிர் 15.12.2016

No comments:

Post a Comment