Saturday, December 24, 2016

ரீசார்ஜ் செய்து கொள்ள புறப்பட்டு விட்டேன்






நாளை வெண்மணி தியாகிகள் நினைவு தினம்.

அரைபடி நெல் கூலி உயர்வு கேட்டதற்காக, அதை செங்கொடியின் கீழ் அணிவகுத்து கேட்டதற்காக உயிரோடு கொளுத்தப்பட்ட நாற்பத்தி நான்கு  தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த கீழ்வெண்மணி நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

வெண்மணி தியாகிகள் என்றுமே நெகிழ்ச்சி தருவார்கள். அவர்களின் உச்சகட்ட தியாகத்திற்கு முன்பு எதுவுமே இணையில்லை என்ற வீரத்தை தருவார்கள்.

அவர்களின் தியாகம் நம் நெஞ்சிற்கு உறுதி தரும். உரமூட்டும். பணிகளை தொடர்ந்து செய்ய பேட்டரியை ரீசார்ஜ் செய்ய வெண்மணி நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

பிறகு சந்திப்போம்.

 

No comments:

Post a Comment