Friday, December 9, 2016

அப்பல்லோ - பயிற்சி போதாது




அம்மா

கிங்காங் என பெயரிட்டு அழைத்தார்,
ஆளுக்கு ஒரு ஸ்பூன் உணவு கொடுத்தார்,
நான்தான்  பாஸ் என்றார்,
சிகை அலங்காரத்தை மாற்றச்சொல்லி உத்தரவிட்டார்,
உப்புமா சாப்பிட்டார்,
சீரியல் பார்த்தார்,
சினிமா பாட்டு கேட்டார்,
சட்டமன்றத்திற்கு அழைத்துச் செல்வதாகவும்
கொட நாட்டு டீ தருவதாகவும் சொன்னார்.

சொல்கிறார்கள், சொல்கிறார்கள்,
சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

உடைந்து நொறுங்கிப் போன பிம்பத்தை  மீட்டெடுக்க வேண்டிய அவசியம் அப்பல்லோவிற்கு உள்ளது. அதற்காக எதையாவது செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது. 

ஆனால் பாவம் இவற்றையெல்லாம் நம்புவதற்குத்தான் யாரும் தயாராக இல்லை. எழுபத்தி ஐந்து நாட்கள் மர்மக் கதையில் இந்த குடும்பப்பாங்கான காட்சிகளை திணித்தால் எப்படி?

கதையளக்கவோ கற்பனை செய்ததை நம்பும்படி சொல்லவோ அப்பல்லோ ஆட்களுக்கு பயிற்சி போதாது.

அடுத்தவர் நம்பும்படி, அவர்களை முட்டாளாக்கும்படி பொய் சொல்ல இந்தியாவில் ஒருவர் பிரதம மந்திரியாக இருக்கிறார். அவரிடம் பயிற்சி எடுத்திருந்தால் போட்டோஷாப் உதவியோடு இன்னும் சிறப்பான திரைக்கதை கொடுத்திருப்பார். 

மிஸ் பண்ணீட்டீங்களே! 

3 comments:

  1. ரமணா படத்தில் வரும் ஆஸ்பத்திரி.... http://naanoruindian.blogspot.in/2016/12/blog-post_7.html

    ReplyDelete
  2. நீங்களும் படித்தவிட்டீர்களா! அருமையான கதை. அந்த நர்ஸ்சுங்க அனுபவம் King Kong கதை எல்லாம் அருமை.
    ஒரு முறை எனக்கு காய்ச்சல் வந்த போது நான் வெளியூரில் நின்ற காரணத்தால் டாக்டரிடம்(அயல்நாட்டில்) சென்றேன்.நல்லா ஓய்வெடுங்க, நல்லா தண்ணீர் குடிங்க மாத்திரை எதுவும் தேவை இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டார். அவர் மருத்துவர்.
    காய்ச்சல் வந்த முன்னாள் முதல்வரை மருத்துவமனையில் அனுமதித்ததே,வைத்திருந்ததே அப்பலோவின் தப்பு.
    அவரை தங்கள் மருத்துவமனையில் அனுமதித்து,வைத்திருந்து அவருக்கு காய்ச்சல் மாறிவிட்டது,நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்,ஊப்புமா சாப்பிடுகிறார், எப்போது வேண்டுமானாலும் அவர் வீடு செல்லலாம் என்று நிறைய நேர்முக வர்ணனை கதைகள் சொல்லி 72 நாட்களுக்கு மேலாக அவரை வைத்திருந்து இறுதியில்....

    ReplyDelete