Saturday, July 9, 2022

PS-I, பயமா இருக்கு


 பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்தினம் ஜெமோ வஜனத்தில் எடுக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வந்த போதே அச்சம் வந்தது.

சம கால பிரச்சினைகளான 

காஷ்மீரை ரோஜாவிலும்
மும்பை முதல் கலவரத்தை பம்பாயிலும்
அஸ்ஸாம், வட கிழக்கு பிரச்சினைகளை உயிரே யிலும்
ஈழப் பிரச்சினையை கன்னத்தில் முத்தமிட்டால் லும்

ஆளும் வர்க்க சார்போடு கொடுத்து திரிபு வேலை செய்தவர்.
மலைவாழ் மக்களையும் ராவணன் படத்தில் மோசமாக சித்தரித்தார் என்று சொல்வார்கள்.

புளிச்ச மாவு ஆஜானைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

இவர்கள் இருவரும் இணைந்தால் என்ன ஆகும் என்பதுதான் என் அச்சம்.

அந்த அச்சம் நேற்று டீஸர் பார்த்ததும் அதிகமாகி விட்டது. 

பொன்னியின் செல்வன் எடுப்பதாக சொல்லிக் கொண்டு பாகுபலி எடுத்துள்ள மாதிரி தெரிகிறது. 

மக்கள் பிரச்சினைகளையே ஆளும் வர்க்க பார்வையில் படம் எடுப்பவர், ஆண்டவர்களைப் பற்றி என்ன பார்வையில் எடுத்திருப்பார் என்பதை அறிய படம் வரும் வரையில் காத்திருக்க வேண்டும்,

No comments:

Post a Comment