Saturday, July 16, 2022

கோயிலைக் காணோமாம் . .

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி ஒன்று.

முன்னாள் போலீஸ் அதிகாரி பொன்,மாணிக்கவேல் சொல்லியுள்ள தகவல் அது.

950 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழனின் மகன், தன் அப்பாவின் நினைவாக கர்னாடக மாநிலம் தும்கூரில் கட்டியிருந்த ஒரு கோயிலையும் அந்த கோயிலில் இருந்த பழமையான நடராஜரின் செப்பு விக்கிரகத்தையும் மற்ற  உற்சவர் சிலைகளையும் காணவில்லை. பழைய கோயில் இருந்த இடத்தில்  புதிதாக ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளதாகவும் ஒரே ஒரு கல்வெட்டு மட்டும் இருப்பதாகவும் அவர் சொல்லியுள்ளார்.

கோயில்களுக்காகவும் சிலைகளுக்காகவும் தங்கள் உயிரையே அளிக்க தயாராக உள்ள எச்.ராசா மற்றும் ஆட்டுக்காரன் ஆகியோர் தலைமையில் தமிழ்நாட்டு சங்கிகள், கர்னாடகா சென்று சோழ வம்சத்தினர் கட்டிய கோயிலை மீட்க சாகும் வரை போராட்டம் நடத்துவார்கள் என்று எதிர்பார்ப்போம். 

No comments:

Post a Comment