நேற்று
இரவு உறங்கப் போவதற்கு முன்புதான் கவனித்தேன்.
வலைப்பக்கம்
25 லட்சம் பார்வைகளை (HITS) ஐ கடந்திருந்தது.
மகிழ்ச்சியாகவும் இருந்தது. நாம் எழுதுவதை தொடர்ந்து படிக்கிறார்கள் என்பதன்
சான்றாக பார்வைகள் எண்ணிக்கை உள்ளதால் உருவான மகிழ்ச்சி.
2009
மக்களவைத் தேர்தல் சமயத்தில் வலைப்பக்கம் தொடங்கி
ஒரு நான்கு வடி பதிவு எழுதினன். தேர்தல் முடிவுகள் திருப்தியளிக்காததால் கடுப்பாகி
இன்னொரு பதிவை எழுதி அத்தோடு வலைப்பக்கத்தினை மூடியும் வைத்து விட்டேன்.
இரண்டாண்டுகளுக்குப்
பின்பு ஒரு விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் அலுவலகம் செல்லாமல் விடுப்பில்
இருந்தேன். அப்போது வீட்டில் இருந்த நேரத்தில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது
எவனோ ஒரு விஷமி, எங்கள் சங்கத்தின் பெயரில் ஒரு வலைப்பக்கம் தொடங்கி அவதூறுப் பிரச்சாரம்
செய்து கொண்டிருந்தான். அவனுக்கு பதிலடி கொடுக்க அங்கே எழுதத் தொடங்கினேன். சென்னை
2 கோட்டத்தின் பொதுச்செயலாளராக இருந்த தோழர் சி.டி.சுரேஷ்குமாரும் இணைந்து கொண்டார்.
இர்வரும் சேர்ந்து பதிலடி கொடுத்தது மட்டுமல்லாமல் ஆக்கபூர்வமான செய்திகள், வரலாற்றுத்
தகவல்கள் ஆகியவற்றை எழுத அந்த விஷமி அந்த வலைப்பக்கத்தையே இழுத்து மூடிவிட்டு ஓடிவிட்டான்.
அப்போது
தொடங்கிய ஆர்வம் இன்னும் தொடர்கிறது. “கடை விரித்தேன், கொள்வாரில்லை” என்று எத்தனையோ
வலைப்பக்கங்கள் முடங்கிப் போன நிலையிலும் தொடர்ந்து எழுத உற்சாகமளிக்கும் அனைவர்க்கும்
மனமார்ந்த நன்றி.
முகநூல்,
வாட்ஸப், யூட்யூப், இன்ஸ்ட்கிராம் என பல சமூக ஊடகங்களுக்கு இருக்கும் மவுசு நிச்சயமாக
வலைப்பக்கத்திற்கு கிடையாது. தமிழ்மணம் முடங்கியது தமிழ் வலையுலகிற்கு பெரிய இழப்பு.
இந்த சூழலிலும் தேடி வரும் நண்பர்களுக்கு நன்றி.
முதல் ஐந்து லட்சம் பார்வைகளைப் பெற ஐந்தாண்டுகள் ஆனதென்றால் கடைசி ஐந்து லட்சமோ
18 மாதங்களில் வந்து விட்டது.
அனாமதேய
இடையூறுகளும் உண்டு. சில சமயங்களில் அவற்றை
நீக்கி நான் மட்டும் பதிலளிப்பேன், கடுமையாகவே பதில் இருக்கும். ஆனால் அவர்கள் பயன்படுத்திய
மொழியை விட நாகரீகமாகவே இருக்கும் என்றால் அந்த பின்னூட்டங்கள் எப்படி இருக்கும் என்று
பாருங்கள்.
“நாமார்க்கும்
குடியல்லோம், நமனை அஞ்சோம்” என்ற நாவுக்கரசர் வரியும் “பல வேடிக்கை மனிதர் போல வீழ்வேன்
என்று நினைத்தாயோ” என்ற பாரதியின் வரிகளும்தான் கொடூரமான ஆட்சியாளர்களுக்கு எதிராக
தைரியமாக எழுத வைக்கிறது. இனியும் எழுத வைக்கும்.
25
லட்சம் பார்வைகள் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழர்! தொடரட்டும் மக்கள் பணி! என்றென்றும் உடனிருப்போம்!
ReplyDeleteஉங்கள் வலைபக்க எழுத்துப் பணி மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள். முயற்சி திருவினையாக்கும். தொடரட்டும்
ReplyDeleteஉங்கள் நற்பணி.
செல்வராஜு.
Superb comrade 👍👍👍🙏🙏🙏
ReplyDeleteவாழ்துக்கள் தோழர் மென்மேலும் தொடரட்டும்
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழர்
ReplyDeleteCongrats!!
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete