"நூபூர் சர்மாவின் பேச்சால்தான் இந்தியா பற்றி எரிந்தது. உதய்பூர் கொலைக்கும் அவர்தான் காரணம். அவர் தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்பு கேட்க வேண்டும்"
உச்ச நீதிமன்றம் நேற்று சொல்லியுள்ளது.
மன்னிப்பு கேட்டால் நூபூர் சர்மாவின் களங்கம் துடைக்கப்பட்டு அவர் குற்றமற்றவர் ஆகி விடுவாரா என்று நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும். நல்ல வேளை வழக்கு அவரது குற்றத்தைப் பற்றியது அல்ல என்பதால் நீதிபதிகள் சொன்னது வெறும் கருத்து மட்டுமே,
இன்னொரு முரண்பாடும் உள்ளது. நூபூர் சர்மா ஒரு உதிரி நபர் என்று பாஜக கழட்டி விட்டது போலவே நீதிபதிகளும் அந்த பெண்மணியை தனி நபராகவே பார்க்கின்றனர். அவர் சார்ந்த கட்சி, கட்சியின் தலைவர்கள், கட்சியின் குரு பீடம், பிரதமராக இருப்பவர் அத்தனை பேருடைய கருத்தியலும் இதுதான் என்பதையும் பாஜகவின் செய்தி தொடர்பாளராகவே நூபூர் சர்மா சிக்கலில் மாட்டினார் என்பதை கணக்கில் எடுக்காதது சரியில்லை.
இத்தனை முரண்பாடு இருக்கும் போதே உச்ச நீதிமன்றம் Islamist ஆக மாறி விட்டது என்று சங்கிகள் சொல்வது இன்னும் ஒரு கொடுமை.
No comments:
Post a Comment