தனக்குத்தானே வீர பட்டம் கொடுத்துக்கொண்ட கோழை சாவர்க்கரின் வரலாற்றைப் படியுங்கள் என்று தொடர்ந்து உபதேசிக்கும் 20000 புத்தக புகழ் ஆட்டுக்காரனுக்கும் தெலுங்கானா ஆட்டுத்தாடி மற்றும் புதுச்சேரி துணை ஆட்டுத்தாடி என இரு பொறுப்புக்களை வகிக்கும் சாவர்க்கரின் புதிய சிஷ்யையான TAMIL MUSIC அம்மையாருக்கும் இந்த நூல் அறிமுகம் சமர்ப்பணம். . .
வாரம் ஒரு நூல் அறிமுகம்
இந்த வாரம் 31.07.2022.
" சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது"
ஆசிரியர் : ஆர். விஜயசங்கர்,
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்,
சென்னை -20,
விலை: ரூபாய் 100.00
அறிமுகம் : எஸ்.ராமன், வேலூர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் மற்றும் வலதுசாரிகள் கடந்த சில வருடங்களாக தியாகியாக கட்டமைத்து வரும் சாவர்க்கரின் உண்மை வரலாற்றை எடுத்துரைத்து எழுதப்பட்ட நூல்.
வரலாறு எவ்வாறு எழுதப்படுகிறது என்பது குறித்து காரல் மார்க்ஸ் அளித்த விளக்கத்தோடு துவங்குகிறது இந்நூல்.
"காலம்காலமாகவே இந்தியா ஒரு இந்து நாடுதான். ஆனால் அது இந்துக்களின் நாடு. பிற மதத்தவர், குறிப்பாக முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் இந்தியா என்ற நாட்டின் நில எல்லைக்குள் வாழ்ந்தாலும் அவர்கள் இந்தியர்கள் அல்ல" என்பதுதான் சாவர்க்கர் முன்வைக்கும் கலாச்சார வாதம் என்பதை குறிப்பிடுகிற நூலாசிரியர் 1885 தொடங்கி 1940 வரை காங்கிரஸ் கட்சியின் மாநாடுகளை தலைமை தாங்கிய டபிள்யு.சி.பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ஆர்,எம்.சயானி, பாபு அம்பிகா சரண் மஜூம்தார், மவுலானா முகமது அலி, அபுல் கலாம் ஆஸாத் ஆகியோர் ஆற்றிய உரைகளை மேற்கோள் காட்டி அவர்களின் நிலைப்பாட்டிற்கும் சாவர்க்கரின் கருத்தோட்டத்திற்கும் இடையிலான மிகப் பெரிய முரண்பாட்டை நிறுவுகிறார்.
1857 சுதந்திரப் போரைப் பற்றி எழுதுகிற சாவர்க்கர் அதிலே இஸ்லாமியர்களின் பங்களிப்பைப் புகழ்ந்து எழுதினாலும் முகலாயர்களின் ஆட்சி வரைலிலான முஸ்லீம் மன்னர்களின் ஆட்சிக்காலத்தை தேசிய அவமானம் என்று விஷத்தையும் கக்கினார் சாவர்க்கர் என்பதை ஆசிரியர் சாவர்க்கரின் நூலிலிருந்தே அம்பலப்படுத்துகிறார்.
அந்தமான் சிறைக்கு சாவர்க்கர் அனுப்பப்பட்ட காதையை விவரிக்கிற நூலாசிரியர் காலாபாணி சிறையில் மற்ற கைதிகள் அனுபவித்த சித்திரவதைகளை சாவர்க்கரும் அனுபவித்தார் என்பதையும் பதிவு செய்கிறார். அதுதான் அவரை மன்னிப்பு கடிதங்கள் எழுத தூண்டியதென்பதையும் விளக்குகிறார்.
அந்தமான் சிறையில் சித்திரவதைகள் அனுபவித்த பல விடுதலைப் போராளிகளைப் பற்றிய விபரங்களை விரிவாக எழுதியுள்ள ஆசிரியர் அவர்கள் யாரும் மன்னிப்பு கடிதம் எழுதவில்லை என்ற உண்மையையும் சேர்த்தே எழுதுகிறார். சிறைவாசிகளின் போராட்டத்தில் கூட கலந்து கொள்ளாத சாவர்க்கர், "அப்படி கலந்து கொண்டால் தான் அனுபவிக்கும் சலுகைகளை இழந்து விடுவோம்" என்று காரணமும் கூறியுள்ளார்.
கோவில் நுழைவுப் போராட்டத்தை ஆதரிப்பதாக சொல்லிய சாவர்க்கர் "இந்துக்கள் அல்லாதவர்கள் பழைய கோவில்களுக்குள் எந்த அளவிற்கு செல்லலாம் என்று குறிப்பிட்டிருக்கும் எல்லைக்குள் அப்பால் தீண்டத்தாகாதவர்களை அனுமத்திக்க வழி வகுக்கும் எந்த சட்டத்தையும் இந்து மகாசபா ஆதரிக்காது, " என்றும் கூறினார் என்பதை சொல்லி சாவர்க்கரின் போலித்தனத்தை தோலுரிக்கிறார்.
முதல் உலகப்போரில் துருக்கி ஜெர்மனிக்கும் ஆதரவாகவும் இங்கிலாந்துக்கு எதிராகவும் நிற்பதை "உலக நாடுகளில் எல்லாம் இஸ்லாம் பரவி விடும்" என்று பார்க்குமளவுதான் சாவர்க்கரின் பார்வை அமைந்துள்ளது.
"வீரர்" என்ற அடைமொழி சாவர்க்கருக்கு எப்படி பொருந்தாது என்பதற்கு அவர் கேட்ட மன்னிப்புக்கள் மட்டுமல்ல, மகாத்மா காந்தியின் படுகொலை வழக்கிலிருந்து தப்பிக்க அவர் செயத வேலைகளும்தான் என்பது விரிவாக எழுதப்பட்டுள்ளது. நூலை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வீரம் என்பது யாதெனில் என்ற தலைப்பில் மகாத்மா காந்தி மற்றும் மாவீரன் பக்த்சிங் ஆகியோர் வழக்குகளை எப்படி எதிர்கொண்டனர் என்பதை விவரித்துள்ளார். முழுமையாக படிக்க வேண்டிய பகுதிகள் அவை,
சாவர்க்கரின் கலாச்சார தேசியக் கொள்கையின் விரிவாக்கமே ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கோல்வாக்கர், ஹெட்கேவர் ஆகியோர் முன்வைத்தனர் என்பதை அவர்களின் நூல்களை மேற்கோள் காட்டி எழுதியுள்ளார்.
சாவர்க்கர் முன்வைத்த தேசிய திட்டத்தின் அடிப்படைதான் ராமர் கோயில் பிரச்சினையாக, குஜராத் கலவரமாக உருவெடுத்தது என்பதை எழுதுகிறார். ஆசிரியர்.
சாவர்க்கர் முன்வைத்த கோட்பாடுதான் குடியுரைச் சட்டமாக உருவாக்கப்பட்டு கோடிக்கணக்கான சிறுபான்மை மக்களின் கழுத்தின் மீது கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்திடக் கூடாது.
பிரிவினை சிந்தனையை ஊட்டிய நடைமுறைப் படுத்திய "சாவர்க்கரை வரலாறு என்றும் மன்னிக்காது"
மத வெறிக்கு எதிரான போரில் ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டிய நூலான இதனை அளித்த தோழர் ஆர்.விஜயசங்கருக்கு நன்றி.
பின் குறிப்பு : Skeletons hidden in the cupboard என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எண்பது பக்கம் கொண்ட இந்த புத்தகத்தில் சங்கிகளின் அலமாரியில் உள்ள சாவர்க்கரின் எலும்புக் கூடு சுக்கு நூறாக உடைக்கப்பட்டுள்ளது. தோழர் விஜயசங்கர் தமிழாக்கம் செய்துள்ள "ஆர்.எஸ்.எஸ் - இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தல்" என்ற நூலில் எத்தனை எலும்புக் கூடுகள் வெளியே கொண்டுவரப்பட்டு உடைக்கப்பட்டுள்ளதோ!
விரைவில் அதனையும் படித்து முடிக்க வேண்டும்.
செவ்வானம்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஏண்டா பிச்சைக்கார பரதேசி, இனிமே கமெண்ட் போட மாட்டேன்னு சொன்னியே! மறுபடியும் வர வெட்கமா இல்லையா? நான் மறுபடியும் சொல்றேன். வெட்டி பந்தா செய்யாதடா அறிவு கெட்ட முண்டம். உருவக் கேலி செய்யற நாய் நீ
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteநாயே நீதாண்டா அது
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉனக்குத்தாண்டா நாயே பி.பி ஏறிப்போச்சு. உன் குடும்ப வரலாற்றை அடுத்தவங்களுக்கு சொல்லாதே
Delete