Saturday, July 13, 2019

நிர்மலா அம்மையார் விருந்தை புறக்கணித்த . . .



நிதியமைச்சகத்திற்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் இடையே ஒரு பனிப் போர் நடந்து கொண்டிருக்கிறது. நிதியமைச்சக அதிகாரிகளை பத்திரிக்கையாளர்கள் சந்திக்கவும் அந்த அலுவலகம் உள்ளே நுழையவும் ஏராளமான தடைகள் போடப் பட்டுள்ளது. 

அதனை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை உதாசீனப் படுத்தப் பட்டதால் 

பட்ஜெட்டிற்குப் பிறகு நிதியமைச்சர் நிர்மலா அம்மையார் அளித்த விருந்தை நூற்றுக்கும் மேற்பட்ட நிதியமைச்சக செய்திகளை சேகரிக்கும் பத்திரிக்கையாளர்கள் புறக்கணித்து விட்டார்கள்.

கலந்து கொண்ட சில பத்திரிக்கையாளர்களும் அவர்களின் நிர்வாகத்தின் கட்டாயத்தால் வேறு வழியில்லாமல் கலந்து கொண்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியான தாஜ் மஹால் ஹோட்டல் விருதானாலும் அதை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த பத்திரிக்கையாளர்களுக்கு பாராட்டுக்கள்.

இவர்களை பழி வாங்கும் படி மத்தியரசு முதலாளிகளுக்கு நிர்ப்பந்தம் அளிக்கலாம். அப்போதும் இந்த ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்.

பிகு: பத்திரிக்கையாளர்கள் வராமல் போனதற்கு அம்மையார் என்ன பதில் சொல்வார் என்ற கற்பனையே மேலேயுள்ள படத்தில் இருப்பது. 

No comments:

Post a Comment