அமித், யோகி, கொலைகள்
உத்திர
பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சூப்பராக உள்ளது என்று மொட்டைச் சாமியார் யோகிக்கு
போலி எண்கவுண்டர் புகழ் அமித்து ஷா நேற்றுதான் சர்டிபிகேட் கொடுத்துள்ளார்.
இன்று
ஒரு செய்தி வருகிறது.
பாஜகவின்
உனாவ் தொகுதி எம்.எல்.ஏ கு;ல்தீப்சிங் செங்கார் ஒரு சிறு பெண்ணை பாலியல் வன் கொடுமைக்கு
உள்ளாக்குகிறார்.
காவல்துறை
வழக்கு பதிய மறுக்கிறது. அந்தப் பெண்ணும் அந்தப் பெண்ணின் தந்தையும் முதலமைச்சர் மொட்டைச்
சாமியார் வீட்டின் முன்பாக தீக்குளிக்க முயல்கிறார்கள்.
கைது
செய்யப்படுகிற தந்தை காவல்துறையால் லாக்கப்பில் அடித்து கொல்லப்படுகிறார். காவல்துறையின்
லாக்கப் கொலைக்கு ஒருவர் சாட்சி சொல்லி விஷயம் பரவியதால் வேறு வழியில்லாமல் அந்த எம்.எல்.ஏ
கைது செய்யப்படுகிறார். சாட்சி சொன்ன நபர் சில வாரங்களில் கொல்லப்படுகிறார்.
பாதிக்கப்பட்ட
பெண்ணுக்கு துணையாக இருந்த அப்பெண்ணின் மாமா மீது பதினெட்டு வருடங்களுக்கு முந்தைய
ஒரு வழக்கு தூசு தட்டப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.
அவரை
சிறையில் சென்று பார்ப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண், அவரது தாய், வழக்கறிஞர், ஒரு உறவினர்
ஆகியோர் காரில் செல்கிறார்கள். நம்பர் பிளேட் இல்லாத ஒரு லாரி தவறான பாதையில் வந்து
இந்த காரை நசுக்குகிறது.
பாதிக்கப்பட்ட
பெண்ணும் வழக்கறிஞரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். தாயும் உறவினரும் சம்பவ
இடத்திலேயே இறந்து விட்டார்கள்.
இன்னொரு
சம்பவம் நேற்று நடந்துள்ளது.
“ஜெய்
ஸ்ரீராம்” என்று சொல்ல மறுத்த ஒரு பதினான்கு வயது வாலிபன் உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளான்.
இதுதான்
உத்திரப் பிரதேச மாநில சட்டம் ஒழுங்கின் லட்சணம். இதற்குத்தான் நற்சான்றிதழ் கொடுத்துள்ளார்
போலி எண்கவுண்டர் புகழ் அமித்து ஷா!
பேய்களின்
ஆட்சியில் கொலைகள்தான் சாத்திரங்கள்!
இதோ இதை எழுதி முடிக்கையில் இன்னொரு செய்தி வருகிறது. பாஜகவின் ஒரு முன்னாள் மாவட்டத்தலைவர் அரசு வேலை வாங்கித்தருவதாக சொல்லி ஒரு பெண்ணை அழைத்து பாலியல் வன் புணர்ச்சி செய்துள்ளார். இது நடந்தது வாரணாசியில்.
பாரத் மாதாகி ஜே! ஸரஸ்வதி வந்தனம். சூர்பனகைகள் கற்பழிக்கப்படும்போது நீதிகேட்டு ராவணன் எவனாவது வந்தால் அப்புறம் ராமலீலாதான்.இதுதானே கடந்த 2000 வருசமாக நடந்துகினு வந்துகினு இருக்கு. ஜெய் ஸ்ரி ராம்.
ReplyDelete