நாமா தேடிப் போகாவிட்டாலும் யாராவது லிங்க் அனுப்பி நம்மை டென்ஷன் செய்யறாங்க!
புளிச்ச மாவு ஜெமோவோட பக்கத்துக்கு போக வச்சிடறாங்க!
மண்டையோட்டையும் தவடையையும் இணைக்கும் குருத்தெலும்பில் அடிபட்டதால் குணமாக நாளாகுமாம். சிவாஜி படத்தில் எந்த இடத்தில் கத்தியால் குத்தினால் உயிர் போகாது என்று ரஜனிக்கு டாக்டர் சொல்லிக் கொடுத்தது போல ஒரு பில்ட் அப்.
ஜெயமோகன் தொண்டர் படை ஆட்கள் அவரிடம் கொஞ்சம் சொல்லுங்கள்.
இவர் மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்ட சில நிமிடங்களிலேயே ஒரு நல்லவர் முக்கியமான ஒரு உண்மையைச் சொல்லி விட்டார்.
"வெறும் வாய்த் தகராறுதான். போலீஸ் கேஸை ஸ்ட்ராங்காக்கவே மருத்துவமனையில் அனுமதி"
ஆக முதல் சீனிலேயே உங்கள் ரீல் அறுந்து விட்டது.
கெஞ்சிக் கூத்தாடி அவரை அந்த பதிவை நீக்க வைத்து விட்டாலும் ஸ்க்ரீன் ஷாட் என்ற விஷயத்தை மறந்து விட்டு மீண்டும் மீண்டும் அவரை அதே நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கச் சொல்லாதீர்கள்.
என்னத்தான் கதாசிரியராக இருந்தாலும் ஓவரா கதை விட்டால் அது தோசை மாவை விட அதிகமாகவே புளித்து விடும்.
"பொதுவாக எழுத்தாளர்கள் எந்நிலையிலும் வலியையோ துயரையோ தன்னை ஆட்கொள்ள விடக்கூடாது என்று நான் நம்புகிறேன். வலியை துயரை வெளிக்காட்டாமலிருந்தாலே போதும். பிறரிடமிருந்து அது நம்மிடம் திரும்பி வராமலிருந்தால் நம்மிலிருந்தும் மறைந்துவிடும். இருக்கும், ஆனால் நாம் கடந்து செல்ல முடியும். நான் நோயில் படுத்திருக்கும் காட்சியை, சோர்ந்து உதவிகோரும் நிலையை இவ்வுலகம் ஒருபோதும் காணப்போவதில்லை."
ஆமாம். இவ்வளவு சொல்லிட்டு எதுக்கு புலம்பிக்கிட்டே இருக்காருன்னு நான் கேட்டதாகவும் சொல்லிடுங்க . .
கொஞ்ச நாளைக்கு ஜெமோ கூடவே இருங்க சார்
ReplyDeleteஎழுத மேட்டர் இல்லையென்று உதயநிதியின் திராவிட போர் வரலாறு என்று கம்யூ முத்தரசன் மாதிரி எழுதி காமெடி பண்ண வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
இப்படி புரியாதது மாதிரி பின்னோட்டம் போட வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்
Delete